- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி கடைசி வெள்ளி பண ஈர்ப்பு பரிகாரம்

ஆடி கடைசி வெள்ளி பண ஈர்ப்பு பரிகாரம்

- Advertisement -

இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அல்லவா. அம்பாள் மகிழ்ச்சியோடு இருப்பாள். நீங்கள் எந்த வரத்தை கேட்டாலும் உங்களுக்கு வாரி கொடுத்து விடுவாள். அந்த மகாலட்சுமி தாயை நினைத்து பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கு பண வசியம் ஏற்படும். அடமானத்தில் வைத்த நகைகளை மீட்டுவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும்.

சில பேர் சொத்து பத்திரங்களை அடமானத்தில் வைத்திருப்பார்கள். அதை மீட்டெடுப்பதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். சக்தி வாய்ந்த நாளைய தினம் செய்ய வேண்டிய அந்த அம்பாள் பரிகாரம் என்ன என்பதைப் பற்றிய விரிவான தகவலை தொடர்ந்து பதிவை படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பணம் வசிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு ஒரு ரூபாய் நோட்டு, கொஞ்சம் சுத்தமான புனுக்கு தேவை. 500 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு எது வேண்டுமானாலும் எடுக்கலாம். 10 ரூபாய் நோட்டு எடுத்துக் கொண்டாலும் சரி. நாட்டு மருந்து கடைகளில் கொஞ்சம் கூடுதல் பணம் கொடுத்தால், இந்த புனுகு நல்லதே கிடைத்துவிடும். இன்று எல்லோரும் மகாலட்சுமி வழிபாட்டிற்காக வீட்டையும் பூஜை அறையையும் தயாராக வைத்திருப்பீர்கள். ஒரே ஒரு ரூபாய் நோட்டை எடுங்கள்.

கொஞ்சமாக புனுகை விரலால் தொட்டு இந்த ரூபாய் நோட்டில் தடவி மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து எடுத்து, உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு இந்த பணம் பல மடங்காக பெருக வேண்டும் அடமானத்தில் வைத்த நகைகளையும் சொத்து பத்திரங்களையும் சீக்கிரம் மீட்டெடுக்க வேண்டும், என்று வேண்டுதல் வைத்து இந்த பணத்தை அப்படியே கொண்டு போய் அடமானம் வைத்த பத்திரத்தில் வைக்கவும்.

- Advertisement -

அப்படி இல்லையா அடமானம் வைத்த நகை சீட்டு இருக்கும் அல்லவா அதன் உள்ளே இந்த நோட்டை வைத்து சீட்டை மடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். சீக்கிரமாக நீங்கள் அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்டெடுக்கும் யோகத்தை அந்த மகாலட்சுமி தாயார் உங்களுக்கு கொடுத்து விடுவாள். நாளை அதிசக்தி வாய்ந்த நாள்.

இதையும் படிக்கலாமே: பிரச்சினைகள் தீர்க்கும் வரலட்சுமி விரத பரிகாரம்

இந்த பண ஈர்ப்பு பரிகாரத்தை செய்ய தவற விடாதீர்கள். உங்களுடைய கஷ்டத்திற்கு அம்பாளே கொடுத்த பரிகாரம் என்று இதை நினைத்து நீங்கள் செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்