- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடிக் கிருத்திகை அன்று படிக்க வேண்டிய வேல்மாறல்

ஆடிக் கிருத்திகை அன்று படிக்க வேண்டிய வேல்மாறல்

- Advertisement -

நாளைய தினம் 29/7/2024 திங்கட்கிழமை அன்று ஆடி கிருத்திகை. முருகனுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்றாலே அதற்கு உகந்த நேரம் மாலை நேரம் தான். திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு மேல், உங்களுடைய வீட்டில் இந்த ஆடி கிருத்திகை வழிபாட்டை தொடங்குங்கள். இரவு 9:00 மணிக்குள்ளாக இந்த வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள்.

நாளை முருகனை நினைத்து சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள், விரதம் இருக்கலாம். பால் பழம் சாப்பிட்டு விரதம் இருப்பதும் அல்லது உப்பு போடாத பலகாரங்களை சாப்பிட்டு விரதம் இருப்பதும் அவரவருடைய ஆரோக்கியத்தை பொறுத்தது. நாளைய தினம் வீட்டில் வேல்  வைத்திருப்பவர்கள், முருகப்பெருமானின் சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பிரசாதம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வேல் இல்லை. முருகனின் திரு உருவ சிலையும் இல்லை என்றாலும் பரவாயில்லை. முருகனின் திரு உருவப் படத்தை வைத்து பூஜையை மன நிறைவோடு செய்யுங்கள். முருகா முருகா என்ற நாமத்தை உச்சரித்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து, கை கூப்பி இந்தப் பாடலை படியுங்கள்.

உங்களுக்கு வேல் வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனும் பட்சத்தில் நாளைய தினம் ஒரு முருகன் கோவிலுக்கு சென்று அங்கிருந்து ஒரு வேல் வாங்கி வந்து வீட்டில் பிரதிஷ்டை செய்து பூஜையை ஆரம்பிப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நாளையில் இருந்து உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று அர்த்தம்.

- Advertisement -

வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா! முருகன் கையில் இருக்கும் வேல் நம் வீட்டில் இருந்தால் அந்த முருகனே நம் வீட்டில் குடி வந்ததாக அர்த்தம். நாளைய தினம் முருகப் பெருமானுக்கு முன்பாக அமர்ந்து வேல்மாறல் படிப்பது சிறப்பான பலனை கொடுக்கும். வேல்மாறல் மிகவும் பெரிய பாடலாக இருக்கிறது. எங்களுக்கு படிக்க தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த 4 வரி பாடலை மட்டும் மனமுருக 6 முறை படிக்க வேண்டும். வேல் மாறலை முழுமையாக படித்த பலனை பெறுவீர்கள்.

வேல் மாறல் மகா மந்திரம்

திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

இதையும் படிக்கலாமே: கடன் தீர ஆடி கிருத்திகை முருகன் வழிபாடு

இந்த பாடல் வரிகளை மனதார யார் வேண்டுமென்றாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம் தவறு கிடையாது. உடல் தூய்மையும் மனத் தூய்மையும் சேர்ந்து முருக வழிபாட்டில் இந்த மந்திரம் இடம்பெறும் போது, உங்களுடைய கஷ்டங்கள் உடனடியாக தீரும். அதிலும் ஆடிக்கிருத்திகை அன்று கட்டாயம் படிக்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினம் முருகப்பெருமான் முன்பாக நின்று இந்த பாடலை படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள்.

சற்று முன்