நாளை 29.7.2024 ஆம் தேதி ஆடி மாத கிருத்திகை. முருக பக்தர்களுக்கு நாளைய தினம் ஒரு திருவிழா என்றே சொல்லலாம். இந்த ஆடி கிருத்திகை முருகனுக்கு ரொம்ப ரொம்ப விசேஷமான நாள். இந்த நாளில் நம்பிக்கையோடு மனம் உருகி முருகப்பெருமானிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும். முருக பக்தர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நன்நாளில் முருகனுக்கு எந்தெந்த அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுத்தால், நம்முடைய கடன் பிரச்சனையிலிருந்து வெளிவரலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். எந்த பொருளை விரும்பி நீங்கள் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வாங்கி கொடுத்தாலும் அதற்கு உண்டான பலன் நிச்சயம் கிடைக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இருந்தாலும் உங்கள் ராசி படி, உங்கள் கடன் சுமை குறைவையும், உங்கள் செல்வ வளம் அதிகரிக்கவும், எந்த பொருளை, அபிஷேகப் பொருளாக வாங்கித் தர வேண்டும் என்பதை பற்றிய ஜோதிடம் சார்ந்த தகவலை தெரிந்து, அதன்படி வழிபாட்டை மேற்கொள்வது கூடுதல் பலனை பெற்றுத் தரும் அல்லவா. அதற்கான சிறப்பான பதிவு. உங்களுடைய ராசி என்ன ராசி. நீங்கள் எந்த பொருளை முருகனுக்கு வாங்கி தர வேண்டும் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படியுங்கள்.
29.7.2024 திங்கட்கிழமை மதியம் 2:41 மணிக்கு கிருத்திகை பிறக்கிறது, மறுநாள் 30:7:2024 செவ்வாய்க்கிழமை மதியம் 1:40 மணி வரை கிருத்திகை இருக்கிறது. திங்கட்கிழமை மாலை அபிஷேகத்திற்கு நீங்கள் இந்த பொருட்களை வாங்கி கொடுத்தாலும் சரி அல்லது செவ்வாய்க்கிழமை காலை இந்த பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுத்தாலும் சரி நல்லது.
மேஷம்
திருமஞ்சனம், நாட்டு மருந்து கடைகளில் இந்த திருமஞ்சனம் என்ற பொருள் விற்கும். அதை வாங்கி முருகன் கோவிலில் குருக்களிடம் முருகனுக்கு இதை அபிஷேகம் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்து விடுங்கள்.
ரிஷபம்
பஞ்சாமிர்தம், உங்கள் கையாலேயே பழ வகைகளை வாங்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, தேன், நாட்டு சர்க்கரை சேர்த்து பிசைந்து முருகப் பெருமான் அபிஷேகத்திற்கு கொடுப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு.
மிதுனம்
சுத்தமான பசும்பால் வாங்கி முருகப்பெருமானுக்கு உங்கள் கையால் கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. பசும்பால் முற்றிலுமாக கிடைக்காத பட்சத்தில் பாக்கெட் பால் வாங்கி கொடுக்கவும்.
கடகம்
சுத்தமான பசுந்தயிர் வாங்கி முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. முடியாத பட்சத்தில் பாக்கெட் தயிர் பயன்படுத்தலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் நாளை மூன்று எலுமிச்சம் பழம் வாங்கி முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யலாம். இல்லை என்றால் 11, 21 என்ற கணக்கில் எலுமிச்சம் பழம் மாலையை முருகப்பெருமானுக்கு போட்டு வழிபாடு செய்வது சிறப்பு.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இளநீர் வாங்கி கொடுத்து முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். முருகப் பெருமானின் மனம் குளிரும். உங்களுடைய மனதும் நிம்மதி அடையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சுத்தமான பன்னீர் வாங்கி முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய கொடுப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிகாரர்கள் அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கி தானம் கொடுக்கலாம். இல்லையென்றால் முருகனுக்கு அலங்காரம் செய்வதற்கு சந்தனம் தேவைப்படும் அதற்கும் சந்தனத்தை வாங்கி தானம் செய்யுங்கள். சுத்தமான சந்தனம் வாங்கி கொடுங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் முருகப்பெருமானுக்கு விபூதி வாங்கி கொடுப்பது சிறப்பு. விபூதி அபிஷேகத்திற்காகவும் வாங்கி கொடுக்கலாம், அல்லது அலங்காரத்திற்காகவும் வாங்கிக் கொடுக்கலாம். சுத்தமான பசு சாணம் விபூதியாக இருக்கட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சுத்தமான மஞ்சள் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுப்பது சிறப்பு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சிவப்பு நிற குங்குமம் வாங்கி அபிஷேகத்திற்கு முருகப்பெருமானுக்கு கொடுப்பது சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் முருகனுக்கு ஆடிக்கிருத்திகை அன்று கரும்புச்சாறு வாங்கி அபிஷேகத்திற்கு கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. பற்றாக்குறை நிதி நிலைமையில் இருந்து வெளிவருவீர்கள்.
இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் வீடுகளில் வேல், வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடிய வழக்கம் இருக்கிறது. உங்களுடைய கைப்பட இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் இருக்கும் வேலுக்கு நீங்கள் அபிஷேகம் செய்யலாம். பொதுவாக வீட்டில் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் முருகன் சிலைக்கோ வேலுக்கோ பசும்பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.
இதையும் படிக்கலாமே: ஆடி கிருத்திகை வழிபாடு
பசும்பாலோடு சேர்த்து உங்கள் ராசி படி மேலே எந்த ஒரு பொருள் அபிஷேகத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு பொருளை வாங்கி வீட்டில் இருக்கும் முருகர் சிலைக்கும், வேலுக்கும் அபிஷேகம் செய்தாலும் சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடி கிருத்திகையில் முருகனிடம் நம்பிக்கையோடு நாம் வைக்கும் வேண்டுதல், அடுத்த ஆடி கிருத்திகைக்குள் நிறைவேறும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.