ஆடி மாத ராசி பலன் – 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு

aadi-month

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் சாதகமான அமைப்பு என்றாலும் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று உங்கள் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் சாதகப் பலன் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக வழிபாடு செய்வதும், சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். மாத பிற்பகுதியில் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு அவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். சிலருக்கு அரசு வழியிலும் அனுகூலம் கிட்டும்.

பரிகாரம்: தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi
கடக ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து நீங்கள் முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடல்நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளையும் பெற முடியும்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிலும் கவனமாக செயல்பட வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும் என்றாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவு லாபங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: புதன் கிழமைகளில் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று பெருமாளை தரிசிப்பதாலும் விஷ்ணு சகஸ்கர நாமம் ஜெபிப்பதாலும் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் மற்றும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்ததாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். பிள்ளைகள் தேவையற்ற பொழுது போக்குகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாலும், கோதுமை, வெல்லம் போன்றவற்றை தானம் செய்வதாலும் இருக்கும் கஷ்டங்கள் குறையும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல் வாங்கலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கௌரவமான நிலை உண்டாகி நிம்மதியுடன் செயல்பட முடியும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் நிம்மதி குறைவு, வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. மாத தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து செல்வதும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமான பலனை அடைவீர்கள். திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில்களுக்குச் சென்று தீபம் ஏற்றி முருக கடவுளை வழிபாடு செய்வதாலும், கிருத்திகை விரதம், சஷ்டி விரம் மேற்கொள்வதாலும் நன்மைகள் உண்டாகும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து நடந்து கொள்வதும் நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவிற்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். பிள்ளைகள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

பரிகாரம்: சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு அர்ச்சனை செய்வது சிறப்பு.

மகரம்:
Magaram rasi
மகர ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் பெரிய பிரச்சினைகளை கூட எளிதில் சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வெளிவட்டார தொடர்புகளால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும்.

பரிகாரம்: சனிபகவான் வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். மந்த நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவுகளும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் விரதமிருந்து விநாயக பெருமானை வழிபடுவதும், சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வதும் நல்லது. தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.

மீனம்:
meenam
மீன ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணவரவுகள் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று மந்த நிலை சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை தாமதங்களுக்குப் பின் அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமான வழிபாடு செய்வது மிகவும் நல்லதாகும். மற்றும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே:
காலண்டருக்கு பின்னால் ‘கிரக ஓரைகளின் காலம்’ என்ற அட்டவணை எதற்காக பயன்படுகிறது என்று தெரியுமா? ஓரைப் பார்த்து செயல்பட்டால் தொட்டதெல்லாம் துலங்குமாம்! நீங்களும் தெரிஞ்சிக்க வேணாமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.