காலண்டருக்கு பின்னால் ‘கிரக ஓரைகளின் காலம்’ என்ற அட்டவணை எதற்காக பயன்படுகிறது என்று தெரியுமா? ஓரைப் பார்த்து செயல்பட்டால் தொட்டதெல்லாம் துலங்குமாம்! நீங்களும் தெரிஞ்சிக்க வேணாமா?

orai-attavanai

காலண்டருக்கு பின்னால் ‘கிரக ஓரைகளின் காலம்’ என்ற அட்டவணையை நாம் பார்த்திருப்போம். ஆனால் அது எதற்காக உபயோகப்படும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. நவகிரகங்களும் நம் தலையெழுத்தை தீர்மானிக்கின்றன. நாம் செய்த பாவவினையின்படி நன்மையும் தீமையும் இந்த ஒன்பது கோள்களின் அடிப்படையில் நம் பிறப்பின் போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. இதை நம்மை படைத்த இறைவனாலேயே மாற்ற முடியாத ஒன்று. நன்மைகள் கிடைக்கவும், தீமைகள் ஏற்படுமாயின் அதை குறைத்துக் கொள்ளவும் நமக்கு தெய்வ வழிபாடுகள் உதவி செய்கின்றன அவ்வளவுதானே தவிர எதிலிருந்தும் நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஓரை என்றால் நவகிரகங்களில் ராகு கேது தவிர மற்ற அனைத்து கிரகங்களும் இரண்டரை நாழிகை 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் தங்கி அடுத்த இராசிக்கு இடம் பெயருவது தான் ஓரை ஆகும். ராகு-கேதுவிற்கு சுற்றுப்பாதை கிடையாது என்பதால் அதற்கு ஓரை கிடையாது. இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரத்தை குறிக்கிறது. ஒரு ராசியில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த கிரகம் தங்கியிருக்கிறதோ அந்த கிரகத்தின் பெயரால் ஓரை என்கிறோம்.

Oorai in Tamil

ஓரையை சுப ஓரை, அசுப ஓரை என்று நல்ல பலனைத் தருபவை, தீய பலனைத் தருபவை என இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாம் எந்த ஓரை நேரத்தில் எந்த காரியத்தை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது நம் முன்னோர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஓரை பார்த்து செய்யப்படும் வேலைகள் அமோக வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். எந்தெந்த ஓரையில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஓரை எப்படி தீர்மானிக்கப்படுகின்றன?
ஞாயிறுக் கிழமையில் காலையில் சூரியன் உதயமாகும் நேரத்தில் அதாவது 6 மணியிலிருந்து 7 மணி வரையிலும் துவங்கும் சூரியன் கிரகம் அதை சூரிய ஓரை என்கிறோம். அதனைத் தொடர்ந்து வரும் அடுத்த அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சூரிய ஓரை முடிந்து சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என தொடர்ச்சியாக கிரகங்கள் வலம் வரும். திங்கள் கிழமை வரும் போது காலை சந்திரன் ஓரை வரும். எல்லாம் முடிந்து மீண்டும் சூரிய ஓரை துவங்கும். இதே போல் சுழற்சி முறையில் நடைபெறும் ஒரு செயல் தான் ஓரையை தீர்மானிக்கிறது.

sunrise

சுப-அசுப ஓரைகள் எவை?
சுப ஓரைகளாக சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியவையும், அசுப ஓரைகளாக சூரியன், செவ்வாய், சனி ஆகியவையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவைகள் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் தரும் என்று இப்போது பார்ப்போம்.

- Advertisement -

சூரிய ஓரை:
சூரிய ஓரை அசுப ஓரையாக கருதப்படுவதால் சூரிய ஓரையில் இந்த செயல்களை எல்லாம் செய்யக்கூடாது. அவ்வகையில் பார்த்தோமேயானால், வெளியில் புறப்படுவது, புதுமனை புகுவிழா கொண்டாடுவது போன்ற செயல்கள் செய்யக்கூடாது. பத்திரம், உயில் போன்றவற்றை சூரிய ஓரையில் எழுதலாம். ஒருவருக்கு நீங்கள் பரிந்துரை செய்ய வேண்டுமென்றால் இந்த ஓரையில் செய்யலாம்.

earth-moon1

சந்திர ஓரை:
சந்திர ஓரை சுப ஓரையாக கருதப்படுவதால் இந்த ஓரையில் நல்ல விஷயங்களை துவங்கலாம். வெளியில் செல்லுதல், வியாபாரம் ஆரம்பிப்பது, ஆலய தரிசனம் செய்வது போன்ற விஷயங்களை செய்வது நல்ல பலனை தரும். இவற்றை வளர்பிறையில் செய்வது நல்லது. தேய்பிறையில் வேண்டாம்.

செவ்வாய் ஓரை:
செவ்வாய் ஓரை அசுப ஓரையாக கருதப்படுவதால் இந்த ஓரையில் சுபகாரியங்களை மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்று. இந்த ஓரையில் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் மௌனம் காப்பதே உங்களுக்கு நன்மை தரும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் இந்த ஓரையில் தாராளமாக செய்யலாம்.

puthan

புதன் ஓரை:
புதன் ஓரை சுப ஓரையாக கருதப்படுவதால் புதிய விஷயங்களை துவங்குவது, வீடு, மனை வாங்குவது, வழக்கு விஷயம் தொடர்பான காரியங்களை மேற்கொள்வது, கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை துவங்குவது, புதுக்கணக்கை ஆரம்பிப்பது போன்ற விஷயங்களை செய்தால் ஜெயம் நிச்சயம் கிடைக்கும்.

குரு ஓரை:
குரு ஓரை சுப ஓரையாக கருதப்படுவதால் நீங்கள் எந்த காரியம் எடுத்தாலும் அது வெற்றியில் போய் முடியும். சுப முகூர்த்தம் குரு ஓரையில் அமைந்தால் யோகம் உண்டாகும். குரு ஓரை பெரிய பெரிய தொழில், வியாபாரம் துவங்குவதற்கு ஏற்ற ஓரை. சுப விஷயங்களுக்கு மற்றும் பொன், பொருள் வாங்குவதற்கு உகந்த நேரமாக இந்த நேரம் அமையும்.

Gold

சுக்ர ஓரை:
சுக்கிர ஓரை சுப ஓரையாக பார்க்கப்படுவதால் எல்லா நல்ல விஷயங்களுக்கும் உகந்த நேரமாக அமைகிறது. திருமணம் தொடர்பான அத்தனை விஷயங்களுக்கும் சுக்கிர ஓரை நல்ல பலன் தரும். வாகனம் வாங்குவதற்கு, தொழில் துவங்குவதற்கு, விருந்து உபசரிப்பு போன்ற செயல்களை இந்த ஓரை பார்த்து செய்யலாம்.

Thirumanam

சனி ஓரை:
சனி ஓரை அசுப ஓரையாக கருதப்படுவதால் வெளியில் புறப்படுதல், பயணம் மேற்கொள்ளுதல் போன்றவற்றை கட்டாயம் செய்யக்கூடாது. வீடு மனை வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களை செய்யலாம். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் சனியின் காரகத்துவ பொருட்கள். அதனால் சனி ஓரையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்கினால் நல்ல பலன் தரும். சுப ஓரை நேரத்தில் மரணயோகம், அஷ்டமி, நவமி போன்றவற்றை நாம் பார்க்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டிற்கு இந்த நிலையை வாசலாக அமைத்தால் என்ன நடக்கும்? உங்கள் ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் யார் அமர்ந்திருந்தால் உங்களுக்கு வீடு அமையும்?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.