- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடிப்பெருக்கு வாராகி அம்மன் வழிபாடு

ஆடிப்பெருக்கு வாராகி அம்மன் வழிபாடு

- Advertisement -

ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுவது ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் பெண்கள் மிகவும் விசேஷமாக பூஜைகளை செய்வார்கள். அதிலும் குறிப்பாக மாங்கல்ய பலம் வேண்டும் என்பதற்காக திருமாங்கல்யத்தை மாற்றும் வைபவம் நடைபெறும். அப்படி சிறப்பு மிகுந்த அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய எல்லா நல்ல காரியங்களும் பல வெற்றிகளை கொடுக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த தினத்தில் வாராகி அம்மனை எப்படி வழிபட செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி மாதம் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதாலும், ஆடிப்பெருக்கு என்பது பெண்களுக்குரிய வழிப்பாடாக கருதப்படுவதாலும் அன்றைய தினம் வாராகி அம்மனை பெண்கள் வழிபடும் பொழுது அவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மங்களங்கள் பெருகும் என்றும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வாராகி அம்மன் வழிபாட்டை ஆடிப்பெருக்கு அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது மிகவும் சிறப்பு அல்லது காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் செய்யலாம். இந்த நேரங்களில் செய்ய இயலாது என்பவர்கள் மாலை நேரத்தில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளோ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

முதலில் வாராகி அம்மனின் சிலைக்கு தங்களால் இயன்ற அபிஷேகங்களை செய்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். சிலை இல்லாதவர்கள் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கண்டிப்பான முறையில் வாராகி அம்மனுக்கு துளசி மாலை சாற்ற வேண்டும். அடுத்ததாக ஒரு சிறிய தட்டில் அட்சதையை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வாராகி அம்மனுக்கு இனிப்பு வகைகள், பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். இதில் இனிப்பு வகைகளில் எள்ளுருண்டை, பொரி உருண்டை போன்ற குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகளை வைக்க வேண்டும். அதேபோல் பழங்களில் நாவல் பழத்தை வைக்க வேண்டும். கண்ணாடி வளையலை அதிக அளவில் வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி வைத்துவிட்டு வாராகி அம்மனின் மூலமந்திரத்தை 33 முறை கூற வேண்டும். பிறகு வாராகி அம்மனுக்கு ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சளை கட்டி அவர்களுடைய கழுத்தில் கட்டி விட வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற நிறங்களில் ஜாக்கெட் துணிகளை வாங்கி வைத்து வாராகி அம்மனை வழிபாடு செய்து விட்டு அந்த துணிகள் மற்றும் கண்ணாடி வளையல் சேர்த்து சுமங்கலி பெண்களுக்கு தானமாக தர வேண்டும். இனிப்பு வகைகளை குழந்தைகளுக்கு தானமாக தர வேண்டும்.

- Advertisement -

இப்படி வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் மங்களங்கள் பெருகும் மேலும் கணவன் மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் நீண்ட நாட்கள் வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 5 மங்களப் பொருட்கள்

மிகவும் எளிமையான இந்த வாராகி அம்மனின் வழிபாட்டை நாளைய தினம் முழு மனதோடு செய்யும் பெண்களுக்கு கண்டிப்பான முறையில் வாராகி அம்மனின் அருளால் மங்கலங்கள் அனைத்தும் பெருகும்.

சற்று முன்