ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு மிகுந்த நாட்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக திகழ்வதுதான் ஆடிப்பூரம். ஆடிப்பூரம் நாள் அன்று அனைத்து அம்மன் ஆலயங்களிலும் அம்மனுக்கு வளையல் சாற்றி சீமந்த வைபோகம் நடைபெறும். அம்மனுக்கு மட்டுமல்லாமல் ஆண்டாளுக்கும் இது உகந்த நாளாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நாளாக தான் இந்த நாளை கூறுகிறார்கள். ஆக மொத்தம் ஆடிப்பூரம் என்பது பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த ஒரு நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் அம்மனை நினைத்து எந்த மந்திரத்தை கூறினால் கேட்ட வரம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அம்மனுக்கு உகந்த மாதத்தில் அம்மனுக்கு உகந்த நாளில் நாம் அம்மனை வழிபாடு செய்யும்பொழுது அதற்குரிய பலன் பல மடங்கு நமக்கு கிடைக்கும் என்றே கூறலாம். பொதுவாகவே அம்மன் வழிபாட்டிற்கு பல விதமான வழிமுறைகள் இருக்கின்றன. அதிலும் சிறப்பு மிகுந்த நாட்களுக்கு என்று சிறப்பு மிகுந்த வழிமுறைகள் பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவற்றோடு சேர்த்து பலரும் அம்மனுக்குரிய மந்திரத்தை உச்சாடனம் செய்து வழிபாடு செய்வார்கள். அப்படி செய்யக்கூடிய மந்திர வழிபாடு மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திர நாளன்று அம்மனுக்குரிய எந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்வது சிறப்பு என்றுதான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த மந்திர வழிபாட்டை ஜூலை மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரம் ஆன மூன்று மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நாம் கூறலாம். ராகு காலம் எமகண்டம் என்று எதுவும் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அம்மனை மனதார நினைத்து விட்டு நாம் எதை செய்தாலும் அது நமக்கு நல்லதாகவே அமையும் என்பதால் இந்த மந்திர வழிபாட்டிற்கு எந்தவித சாஸ்திர சம்பிரதாயமும் தேவைப்படப்படுவதில்லை. அதே போல் இந்த மந்திர வழிபாட்டை செய்பவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அசைவத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த மந்திரத்தில் பீஜ வார்த்தைகள் சேர்ந்திருக்கிறது.
இந்த மந்திரத்தை வீட்டிலும் கூறலாம், ஆலயத்தில் அமர்ந்து கொண்டும் கூறலாம், வேலை செய்யும் இடத்திலிருந்து கொண்டும் கூறலாம், நின்று கொண்டும் கூறலாம், அமர்ந்து கொண்டும் கூறலாம். எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் நாம் இந்த மந்திரத்தை கூறலாம். முதலில் பெண் தெய்வங்களில் தங்களுக்கு எந்த தெய்வம் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்களோ அவர்களை மனதார நினைத்துக் கொண்டு உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகள் எது நிறைவேறாமல் இருக்கிறதோ அது நிறைவேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அம்மனின் 1008 நாமங்களில் ஒன்றாக திகழக்கூடிய இந்த மந்திரத்தை முழுமனதோடு குறைந்தபட்சம் 15 நிமிடம் கூற வேண்டும். பிறகு திரும்பவும் அம்மனை மனதார நினைத்துக் கொண்டு தங்களுடைய வேண்டுதலை முன்வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த முறையில் ஆடிப்பூரம் நாள் அன்று நாம் செய்யும்பொழுது அம்மனின் அருளால் விரைவிலேயே நாம் கேட்ட வரம் நமக்கு கிடைக்கும்
மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மாத்ரே ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ
இதையும் படிக்கலாமே: ஆடிப்பூர ஆண்டாள் வழிபாடு
அம்மனுக்கு உகந்த ஆடிப்பூரம் நாளன்று ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபாடு செய்வதோடு இந்த ஒரு மந்திர வழிபாட்டையும் சேர்த்து செய்பவர்களுக்கு அவர்கள் கேட்ட வரம் விரைவில் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்