வெள்ளிக்கிழமை என்பது மிகவும் விசேஷகரமான வழிபாட்டிற்குரிய தினமாக கருதப்படுகிறது. அதேபோல் ஆடி மாதம் பெண் தெய்வங்களுக்குரிய வழிப்பாட்டுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆடி மாதமும் வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் பொழுது அதற்கு பல அற்புதமான சக்திகள் இருக்கிறது. அன்றைய தினத்தில் நாம் என்ன வழிபாடு செய்தாலும் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது கண்டிப்பான முறையில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் ஆடி மாதத்தில் மற்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தாமல் தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறோம். அந்த வகையில் ஆடி வெள்ளிக்கிழமை துளசி வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமிக்குரிய தினமாக கருதப்படுகிறது. சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பலரும் அதை நடைமுறையில் செய்து கொண்டு தான் வருகிறார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமியின் மறு உருவமாக திகழக்கூடியவர்தான் துளசி தாயார். அப்படிப்பட்ட துளசி தாயாரையும் நாம் வெள்ளிக்கிழமை வழிபடும் பொழுது நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி தாயாரை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு வீட்டில் இருக்கக் கூடிய துளசிச் செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து துளசி செடிக்கு முன்பாக பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். பிறகு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். துளசி தாயாருக்கு அவல் என்பது மிகவும் பிடிக்கும். அவலால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும்.
துளசி காயத்ரி மந்திரம் என்று இருக்கிறது. அந்த மந்திரத்தை கூறி மனதார வழிபாடு செய்யலாம். பிறகு அந்த துளசிச் செடியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு உங்களுடைய வாழ்க்கையில் எதுவெல்லாம் உங்களுக்கு பிரச்சினையாக திகழ்கிறதோ, அவை அனைத்தையும் அந்த துளசி தாயிடம் கூற வேண்டும். இது தெய்வீக சக்தி மிகுந்த செடி என்பதால் நாம் சொல்லக்கூடிய அனைத்து விஷயங்களையும் கேட்டு அதற்குரிய தீர்வை தரக்கூடியதாகவும் இந்த துளசி செடி திகழ்கிறது.
இவ்வாறு நாம் வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் தினமும் தொடர்ந்து 48 நாட்கள் என்ற எண்ணிக்கையில் கூட துளசி செடியை வழிபாடு செய்யலாம். மனதார துளசி செடியிடம் நம்முடைய கஷ்டங்களை நாம் கூறும்பொழுது அந்த கஷ்டங்கள் படிப்படியாக விலகும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்த துளசி செடியில் தான் நம்மை காத்து ரட்சிக்கும் பெருமாள் இருக்கிறார் என்றும் நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக் கூடிய மகாலட்சுமி தாயார் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது என்பதால் துளசி செடியை நாம் எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ அந்த அளவிற்கு மகாலட்சுமி தாயாரையும் பெருமாளையும் வழிபடுவதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் சகல நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே ஆடி வெள்ளி அன்று காலையில் சொல்ல வேண்டிய மந்திரம்
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை யார் ஒருவர் முழு மனதோடு பின்பற்றுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்