ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா? வீட்டில் விளக்கு ஏற்றும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

vilakku-deepam
- Advertisement -

வீட்டில் அனைவரும் விளக்கு ஏற்றுவது என்பது வீட்டின் சுபீட்சம் நிலைத்து நிற்க செய்வது ஆகும். விளக்கு ஏற்றாத வீடுகளில் வறுமையும், துன்பமும் தாண்டவமாடும் என்பார்கள். தினமும் காலை, மாலை இருவேளையும் நில வாசலிலும், வீட்டின் பூஜை அறையிலும் விளக்கு ஏற்றி வைப்பது சகல, செல்வங்களையும் ஒரு குடும்பத்திற்கு வாரி வழங்கக் கூடியது ஆகும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் தினமும் எல்லாம் விளக்கு ஏற்றுவது கிடையாது. சிலர் செவ்வாய், வெள்ளி சிலர் வெள்ளி அன்று மட்டும் ஏற்றுவது வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படி விளக்கு ஏற்றும் பொழுது அதைப் பெண்கள் தான் ஏற்ற வேண்டுமா? ஏன் ஆண்கள் விளக்கு ஏற்றக்கூடாது? சரி வேறு வழியே இல்லை, ஆண்கள் விளக்கு ஏற்ற வேண்டும்! என்ன செய்யலாம்?

ainthu-muga-vilakku

பெண்ணை மகாலட்சுமியின் அம்சமாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதே போல் ஆண்களையும் ஸ்ரீமன் நாராயணராக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பெண்களின் கைகளால் விளக்கு ஏற்றப்படும் பொழுது அது மகாலட்சுமியே வந்து விளக்கேற்றுவது போல் அர்த்தப்படுகிறது. பெண்கள் கையால் விளக்கேற்றினால் அந்த வீட்டில் செல்வ வளம் செழிக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

ஆண்கள் ஏற்றினால் செல்வம் என்ன குறைந்து விடுமா? என்று நீங்கள் கேட்கலாம். சாஸ்திரம் கூறும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும் நிறைய காரணங்கள் மற்றும் அர்த்தங்கள் இருக்கும். அந்தக் காலத்தில் எல்லாம் காலையில் வேலைக்கு போன ஆண்கள் மாலையில் வீடு திரும்பும் பொழுது மிகவும் சோர்வாக வருவார்கள். இதனால் அவர்களுக்கு இறைவழிபாட்டில் அவ்வளவு ஆர்வம் இருக்காது.

vilakku

ஆனால் காலையில் இருந்து வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு மாலையில் விளக்கேற்றும் பொழுது பக்தியில் அதிக ஈடுபாடு இருக்கும். எந்த ஒரு வழிபாட்டையும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது தான் அதற்கு பலனும் உண்டு. ஆனால் இப்போது இருக்கும் நிலை வேறு. பெண்களும், ஆண்களுக்கு இணையாக வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

எனினும் ஆண்கள் இன்னும் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது என்று கூறப்படுவது ஏன்? பொதுவாக பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு ஆண்கள் ஆடை அணிவதில் 1008 விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. ஆன்மீக ரீதியாக ஆண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடும் பொழுது மேல் சட்டை அணிய கூடாது.

praying-god1

அது போல் வேஷ்டியை தவிர வேறு எந்த ஒரு உடையும் எடுத்த கூடாது. குளிக்காமல் இறை வழிபாடு செய்யக் கூடாது. இப்படி நிறைய விதிமுறைகளை கடைபிடித்து ஒருவர் முழு பக்தியுடன் இறைவனை வழிபடும் பொழுது அவர்களுக்கு உண்மையிலேயே பலன்கள் அதிகம் உண்டு. அதே விதிமுறைகளை தான் வீட்டிலும் அவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

- Advertisement -

viboothi

வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றும் பொழுது மேல் சட்டை அணியாமல், பனியன், பேண்ட், லுங்கி போன்ற உடைகளை தவிர்த்து, வேஷ்டி மட்டும் அணிந்து கொண்டு சுத்த பத்தமாக நெற்றியிலும், மார்பிலும் விபூதி தரித்து கொண்டு விளக்கேற்றினால் அதற்குரிய பலன்கள் தனித்துவமானவையாக கருதப்படுகிறது. இந்த வகையில் ஒரு ஆண் வீட்டில் தாராளமாக விளக்கேற்றலாம். ஆனால் இதைப் பலரும் சரியாக கடைபிடிக்க மாட்டார்கள் என்பதால் பொதுவாகவே ஆண்கள் விளக்கு ஏற்றக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
உப்பில் இதை மட்டும் எழுதி பாருங்க! எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், தண்ணீரில் கரையும் உப்பு போல, அந்தக் கடன் கரைந்து காணாமலே போகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -