உப்பில் இதை மட்டும் எழுதி பாருங்க! எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், தண்ணீரில் கரையும் உப்பு போல, அந்தக் கடன் கரைந்து காணாமலே போகும்.

salt

எத்தனை பரிகாரங்களை செய்தும் கடன் பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள், உடனடியாக இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். இதற்கு செலவாகும் பொருள் 1 கைப்பிடி உப்பும், ஒரு விரலி மஞ்சளும் தான். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து, கடனை அடைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டால், நிச்சயம் அது உங்களுக்கு வெற்றியை தரும். கடன் பிரச்சனை காணாமல் போக, கடன் பிரச்சனை தண்ணீரோடு கரைந்து போக, நம்பிக்கையோடு, நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

salt

கடனை அடைப்பதற்கு உகந்த நாள் செவ்வாய்க் கிழமை. கடனை தீர்க்க வேண்டுதல் வைக்க வேண்டிய நேரம் செவ்வாய் ஓரை. இந்த பரிகாரத்தையும் செவ்வாய்க்கிழமை அன்று வரும் செவ்வாய் ஓரையில் செய்வது மிகவும் சிறப்பானது. செவ்வாய் கிழமையை தவிர்த்து மற்ற தினங்களில் செய்தாலும் பலன் உண்டு. ஆனால் செவ்வாய்க்கிழமையில் பரிகாரத்தை தொடங்கும் போது இரட்டிப்பு பலனை உடனடியாக பெற முடியும்.

உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பாளத்தில் அந்த உப்பை பரப்பி கொட்டி கொள்ள வேண்டும். உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை உள்ளதோ அந்த கடன் தொகையை உங்களது வலது கை ஆள்காட்டி விரலால். அந்த உப்பின் மேல் எழுதிவிட வேண்டும். லட்ச ரூபாய் கடனாக இருந்தாலும், கோடி ரூபாய் கடனாக இருந்தாலும் உப்பில் அந்த தொகையை எழுதி விடுங்கள்.

kadan

அதன் பின்பு, கொஞ்சம் பெரிய மண் அகல் விளக்கை எடுத்துக்கொண்டு, அல்லது மண்பானை இருந்தாலும் சரிதான், இந்த உப்பை அனைத்தையும் எடுத்து அந்த மண் அகல் விளக்கில் நிரப்பி, அதன் மேலே ஒரு விரலி மஞ்சளை வைத்து, மகாலட்சுமியின் முன்பாக வைக்க வேண்டும். இந்த உப்பு 11 நாட்களுக்கு உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கலாம். நீங்கள் கடன் தொகையை திருப்பி அடைப்பதற்கு என்ன முயற்சிகள் தேவையோ அதை தீவிரமாக செய்து கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது சில பேருக்கு சொத்துக்கள் இருக்கும். அதை விற்று கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் அந்த சொத்தை சரியான விலை கொடுத்து யாரும் வாங்க மாட்டார்கள். அவசரத்தேவை கடன்காரர்கள் என்று தெரிந்தால் அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு சொத்து நல்லபடியாக விற்கப்படும். உங்களுடைய கைக்கு பணம் வந்து சேர்ந்து, அந்த பணத்தை வைத்து உங்களது கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

சில பேர் கடனை வாங்கி தொழிலை நடத்த முதலீடு செய்திருப்பார்கள். அந்த தொழில் சரியாக செல்லாமல், நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் மேலும் கடனை வாங்கி பிரச்சனையில் சிக்கி கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் உங்களுடைய தொழில் லாபகரமாக நடைபெறும். லாபத்தை சம்பாதித்து கடனை திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு உங்களுக்கு நல்லது நடக்கும். இதுமட்டுமல்ல, உங்களுக்கு இருக்கக்கூடிய, எப்படிப்பட்ட பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை சரிசெய்ய இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு ஒரு முறை செய்து பாருங்கள்.

சரி, 11 நாட்கள் கழித்து அந்த உப்பை என்ன செய்வது? சுத்தமான பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி அந்த உப்பை எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் கொட்டி மகாலட்சுமியிடம் மீண்டும் வேண்டுதலை வைக்க வேண்டும். ‘உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை தீர வேண்டும். மேலும் மேலும் கடன் உங்களுக்கு வராமல் இருக்க வேண்டும்.’ என்று மனதார உச்சரித்து அந்த உப்பை தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து விடுங்கள். அவ்வளவு தான். உங்கள் கஷ்டமும், அதில் நீங்கள் எழுதிய கடன் தொகையும் அந்த தண்ணீரோடு நிச்சயம் கரைந்து போகும்.

pray

சிறிய அளவில் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூன்று முறை இப்படி செய்தாலே நல்ல பலன் கிடைத்து விடும். பிரச்சனை பெரியதாக உள்ளவர்கள், மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்து, நல்ல பலனை அடைந்து, கடன் தொகையை திருப்பிக் கொடுப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, பரிகாரத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டால், பின்பு தொடர்ந்து செய்து வாருங்கள். விரலி மஞ்சளை மட்டும் அப்படியே அடுத்தடுத்த வாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால், நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வெள்ளிக்கிழமை தோறும் இதை செய்து வரும் பெண்களின் முகம் எப்போதும் லட்சுமி கடாட்சத்தோடு தான் இருக்கும். பெண்கள் முகம் பொலிவோடு இருக்க இதை செய்தாலே போதும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.