நாளை(6/7/2021) செவ்வாய்க்கிழமை ஆனி கிருத்திகை! முருகனை இப்படி வழிபட்டால் நீங்கள் மனதில் நினைத்ததெல்லாம் உடனே நடக்கும்.

murugan-vilakku
- Advertisement -

நாளை பிலவ வருடம் ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை அன்று வர இருக்கிறது. செவ்வாய்க்கிழமையில் கிருத்திகையும் சேரும் பொழுது பொதுவாக முருகனை வழிபடுவது சகல, சௌபாக்கியங்களையும் கொடுக்கும் என்பது சாஸ்திர நியதி. செவ்வாய்க் கிழமையில் கிருத்திகை நட்சத்திர வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் வேண்டியபடியே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்று தீர்க்கமாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

murugan-silai-abishegam

அது மட்டுமல்லாமல் கிருத்திகையில் விளக்கேற்றி முருகனை வழிபடுபவர்களுக்கு சொந்த வீடு அமையும் பாக்கியமும் உண்டு. நாளைய நாளில் முறையாக முருக வழிபாடு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம். ஆனி கிருத்திகையில் முருக வழிபாடு செய்தால் நீங்கள் மனதில் நினைத்த சில விஷயங்கள் உடனே நடக்கும் என்பது நியதி. அந்த வரிசையில் நாளை செவ்வாய்க்கிழமை அன்று முருக வழிபாடு எப்படி மேற்கொள்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

பொதுவாக முருகனுக்கு இரண்டு விளக்கு அல்லது ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். விளக்கில் நெய் மற்றும் நல்லெண்ணெய் தவிர வேறு ஒரு எந்த எண்ணையையும் பயன்படுத்தக் கூடாது. அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடை அல்லது பட்டுடை தரித்து முருகனுடைய படத்திற்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். முருகனுக்கு உகந்தது கதம்பம் அல்லது முல்லை மலர் ஆகும். இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளலாம். மேலும் முருகனுக்கு நைவேத்தியம் படைக்க சித்ரன்னம் எனப்படும் கலவை சாதம் அல்லது காய்கறிகள் பல கலந்து செய்யப்பட்ட சாம்பார் சாதம் நெய் ஊற்றி சுட சுட நிவேதனம் செய்யலாம்.

முருகனுடைய விக்ரஹங்கள் வைத்திருப்பவர்கள் அதற்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்வது அவசியமாகும். தண்ணீரால் அபிஷேகம் செய்து பின்னர் முருகனுக்கு பால், பன்னீர், விபூதி என்று வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகத்திற்கு பஞ்சாமிர்தம் படைப்பது இன்னும் சிறப்பானது. உங்களிடம் பஞ்சாமிர்தம் இருந்தால் அதை நைவேத்தியமாகவும் வைக்கலாம் மேலும் அபிஷேகம் செய்யவும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

பின்னர் முருகனுடைய வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன, குங்கும திலகம் இட வேண்டும். பொதுவாக பூஜை அறையில் கோவிலுக்கு செல்லும் பொது வரக் கூடிய தெய்வீக மணம் வீச நீங்கள் வைக்கும் சந்தனத்துடன் ஜவ்வாது சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஜவ்வாது, சந்தனம் சேரும் பொழுது வீட்டின் பூஜை அறை மட்டுமல்லாமல் வீடு முழுவதுமே தெய்வீக வாசம் வீசும். இந்த வாசம் முருகப் பெருமானுக்கு மிகவும் இஷ்டமான ஒன்றாகும். வாசனை மிகுந்த இடங்களில் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் நிரம்பி இருக்கும் என்பது சாஸ்திர நியதி.

அதன் பின் முருக மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், மூல மந்திரங்கள் உச்சரித்து முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆறு புத்தம் புதிய அகல் விளக்காக இருந்தாலும், பழைய அகல் விளக்காக இருந்தாலும் சரி அவற்றை முருகனுக்கு முன்பு வரிசையாக வைத்து பஞ்சு திரி இட்டு அல்லது நூல் திரி இட்டு தீபம் ஏற்றி முருகனுக்கு அரோகரா என்ற நாமத்தோடு பூஜை, புனஸ்காரங்களை துவங்க வேண்டும். காலையிலும், மாலையிலும் அல்லது மாலை மட்டும் உபவாசம் இருந்தும் உபவாசம் இல்லாமலும் இந்த பூஜையை மேற்கொள்ளலாம். நாளைய ஆணி கிருத்திகை நன்னாளில் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு சொந்த வீடு அமையும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் மற்றும் வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடியே உடனே கிடைக்கும்.

- Advertisement -