- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்

நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்

- Advertisement -

இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி வைகாசி மாதத்தின் கடைசி நாள் சனிக்கிழமை இதோடு சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் விநாயகரின் வழிபாடு என்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது இந்த மாதம் முழுவதும் நாம் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் தீருவதோடு சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களும், கஷ்டங்களும் விலகும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சக்தி வாய்ந்த இந்த நாளில் விநாயக பெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நினைத்தது நடக்க மந்திரம்

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அதிலும் மந்திர வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஏற்றார் போல் ஒவ்வொரு மந்திரங்களை நாம் உச்சரிக்கலாம். அதேசமயம் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும், நாம் நினைத்த செயல் நினைத்தபடியே நடந்திட வேண்டும் என்பதற்காகவும் மந்திரம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பிஜாசர மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த மந்திரத்தை மாலை 6:30 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் தங்களுக்கு எப்பொழுது நேரம் இருக்கிறதோ அப்பொழுது கூறவேண்டும். இந்த மந்திரத்தை வீட்டு பூஜை அறையில் கூற விரும்புபவர்கள் விநாயகப் பெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அமர்ந்து இந்த மந்திரத்தை கூறலாம். பூஜை அறைக்கு செல்லாமல் வேறு எந்த இடத்திலும் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். முழுமனதோடு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக தாங்கள் என்ன வேண்டுதலை நினைத்திருக்கிறீர்களோ அந்த வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் கூறிவிட்டு இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடமாவது கூறவேண்டும். 10 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் உங்களுடைய வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் முன்வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் நீங்கள் நினைத்தது வேண்டியது அப்படியே நடக்கும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் நாம் கூறலாம். அமர்ந்து கொண்டும் கூறலாம். நின்று கொண்டும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை. முழு மனதோடு விநாயகப் பெருமானை மட்டும் நினைத்துக் கொண்டு கூறினால் போதும்.

மந்திரம்

“ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நமஹ”

இதையும் படிக்கலாமே: சங்கு சக்கர ஆஞ்சநேயர்

விநாயகப் பெருமானை நினைத்து விநாயகப் பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாளான இன்று இரவுக்குள் இந்த ஒரு மந்திரத்தை முழு மனதோடு கூறுபவர்களுக்கு அவர்கள் வேண்டியது அப்படியே நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்