நாளை(16/6/2021) ஆனி மாத முதல் சஷ்டி விரதம் இப்படி இருந்தால் கேட்ட வரம் கேட்டபடியே கிடைக்குமாம் தெரியுமா?

murugan-vilakku
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு கேட்ட வரம் கேட்டபடியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருந்தால் விரைவில் மகப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களுடைய தீவிரமான நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த வகையில் நாளை பிலவ வருடத்தின் ஆனி மாதம் வரும் சஷ்டி திதியில் இப்படி விரதத்தை கடைபிடித்தால் கஷ்டங்கள் யாவும் நீங்கி, எல்லா நன்மைகளும் நடைபெறும். அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Murugan_ Swamimalai

முருகப் பெருமானுக்கு உகந்த திதி ‘சஷ்டி’ ஆகும். இந்த சஷ்டி திதி பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறாம் நாள் வருகிறது. ஒவ்வொரு சஸ்டியிலும் முருகப் பெருமானை நினைந்து முழு நேர விரதம் இருப்பவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும். சஷ்டி என்றால் ஆறு என்பது பொருளாகும். முருகனுக்கு ஆறுமுகங்கள் உண்டு, அவருடைய ‘சரவணபவ’ மந்திரத்திற்கு ஆறு அட்சரங்கள் உண்டு, ஆறு படை வீடுகள் கொண்ட மற்றும் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் சஷ்டிக்கும், முருகனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

- Advertisement -

அசுரர்களை அழிப்பதற்கு அவதாரமெடுத்த முருகன் தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை எல்லாம் வாரி வழங்குபவர் ஆவார். சஷ்டி விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் உபவாசமிருந்து இறை நாமம் ஜெபித்து முருகப் பெருமானை வழிபடலாம். அப்படி நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், உடல் ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள் ஒரு வேளை உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம் அல்லது பாலும், பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

murugan1

சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து தோஷங்களும் எளிதாக விலகும். எந்த ஒரு கெட்ட சக்தியும் அவர்களை அணுகாது. தீராத பிணியும், எதிரிகள் தொல்லை, எமபயம் எல்லாம் நீங்கும். வெற்றி மேல் வெற்றி குவியும். சஷ்டி திதியில் அதிகாலையில் எழுந்து பிரம்மமுகூர்த்தத்தில் நீராடி முருகப் பெருமானுக்கு தேவையானவற்றை அலங்காரம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆறுமுகனுக்கு 6 தீப விளக்குகள் வைத்து ஏற்றுவது கூடுதல் சிறப்பு.

- Advertisement -

மேலும் ஆறு வகையான நைவேத்தியங்கள் படைப்பது என்பது இன்னும் விசேஷமானது ஆனால் உங்களால் ஆறு வகையான உணவுகளை சமைக்க முடியாவிட்டால் சர்க்கரை பொங்கல் அல்லது தயிர் சாதம் போன்ற ஏதாவது ஒன்றை தயார் செய்து கொள்ளலாம். வேல் வைத்திருப்பவர்கள் வேலுக்கு அபிஷேகம் செய்து விரதத்தை ஆரம்பிக்கலாம். முருகன் சிலை வைத்து இருப்பார்கள் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பொதுவாக தெய்வ விக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பெரியதாக வாங்கக் கூடாது என்பது நியதி. அவற்றிற்கு காய்ச்சாத பாலாலும், பன்னீராலும் அபிஷேகம் செய்து பின் தூய நீரால் அபிஷேகம் செய்து சந்தான, குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து கொள்ளுங்கள்.

murugan

சண்முக கவசம், கந்த சஷ்டி கவசம், முருகன் பாடல்கள், முருகன் மந்திரங்கள் போன்றவற்றில் உங்களுக்கு எது தெரிந்தாலும் அவற்றை அன்றைய நாள் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும். உங்களால் உச்சரிக்க முடியாவிட்டால் வீட்டில் ஒலி வடிவமாக ஒலிக்க விடுங்கள். சஷ்டி திதி அன்று வீட்டில் முருக கவசம் ஒலிப்பது சகல திருஷ்டிகளும் நீங்க செய்யும். குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து நல்ல பலன்கள் உண்டாகும். முடிந்தால் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள். அப்படி இல்லை என்றால் வீட்டிலேயே மாலை வேளையில் 6 அகல் விளக்குகளில் தீபமேற்றி முருக மந்திரங்களை உச்சரித்து தீப, தூப, ஆராதனை காண்பித்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். சஷ்டியன்று முருகனுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் வேண்டிய வரம் வேண்டியபடி அப்படியே கிடைக்குமாம்.

- Advertisement -