நாளை ஆனி வளர்பிறை சதுர்த்தி – இவற்றை செய்து மிகுதியான பலன்களை பெறுங்கள்

vinayagar
- Advertisement -

ஓம் என்கிற பிரணவ மந்திரத்தை தொடர்ந்து மனதளவில் உச்சரிப்பவர்களுக்கு அனைத்து வினைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும். நமது இந்து மதத்தில் முழுமுதற்கடவுளாக வழிபடும் தெய்வமான விநாயகப் பெருமான் அந்தப் பிரணவ மந்திரத்தின் வடிவமாகவே இருக்கிறார். நன்மைகள் அனைத்தையும் வழங்கும் தெய்வமாக இருக்கும் விநாயகரை வழிபட சிறந்த தினங்கள் மாதந்தோறும் வருகின்ற சதுர்த்தி தினங்களாகும். அந்த வகையில் நாளை ஆனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

vinayagar

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்திற்கு நான்காவதாக வருவது சதுர்த்தி தினம் எனப்படுகிறது. இந்த இரண்டு சதுர்த்தி தினம் விநாயகர் பெருமானை வழிபடுவதற்குரிய சிறந்த திதி தினமாகும். அதிலும் ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயக பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.

- Advertisement -

ஆனி வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கோ அல்லது அவரது சந்நிதிகோ சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

vinayagar

ஆனி மாத வளர்பிறை சதுர்த்தி சனிக்கிழமை தினத்தில் வருவதால் இத்தினத்தில் விநாயகருக்கு விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு சனி கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்க பெறுவீர்கள். திடீர் ஆபத்துகள் ஏற்படுவதிலிருந்து காக்கும். கல்வி, கலை மற்றும் தேர்வுகளில் சிறந்த நிலையை பெறலாம். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள், ஒப்பந்தங்கள் கிடைக்கபெற்று நல்ல தனவரவு உண்டாகும். வீட்டில் பண சேமிப்பு உயரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
விருச்சிக ராசியினருக்கான அதிர்ஷ்ட பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aani valarpirai sathurthi in Tamil. It is also called as Aani matham in Tamil or Vinayagar valipadu in Tamil or Sathurthi viratham in Tamil or Aani sathurthi in Tamil.

- Advertisement -