உங்கள் வீட்டில், கடைபிடிக்க வேண்டிய சில ஆன்மிக குறிப்புகள். இவைகளை கடைபிடித்து வந்தால், என்றுமே பணவரவிற்கு குறைவிருக்காது!

money

நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றாலும், சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பூதாகரமாக வெடிக்க கூடாது என்றாலும், சில ஆன்மீக குறிப்புகளை நாம் பின்பற்றி வரலாம். முழுமையான இறை வழிபாட்டின் மூலம் தான் நம்முடைய வாழ்க்கை முழுமை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் அடிப்படையில், நம்முடைய வீட்டில் கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களால் இந்த குறிப்புகளை எல்லாம், பின்பற்ற முடியவில்லை என்றாலும், முடிந்தவரை உங்களுடைய பிரச்சனை தீர்வதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து பயனடையலாம்.

Home 2

முதலில் உங்கள் வீட்டு நில வாசப்படியில் வேப்பிலையோ அல்லது மா இலையோ கட்டாயம் கட்டியிருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அந்த இலைகளை மாற்றினால் போதும். இவைகளை தினம்தோறும் கொண்டுவந்து புதியதாக வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதோடு சேர்த்து உங்கள் வீட்டின் நலனிற்காக, ஒரு வெள்ளருக்கன் கட்டையை எடுத்துவந்து, சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி, அந்த கட்டையின் மேல், மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, ஒரு சிகப்பு கயிறு கட்டி உங்கள் நிலவாசப்படியில் தொங்கவிடுவது வீட்டிற்கு மிகவும் நல்லது. தினம்தோறும் ஊதுபத்தி காண்பிக்கும் போது இந்தக் கட்டைக்கும் காண்பித்து விடுங்கள். இப்படி செய்யும்பட்சத்தில் உங்கள் வீடு ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு உள்ளே வரும்போதும், நிலவச படியின் மேல் கால் வைத்து மிதித்து போகக்கூடாது. எப்போதுமே நில வாசல் படியை தாண்டி தான் செல்ல வேண்டும். உங்கள் வீட்டு குழந்தைகள் நிலவாசல்ப்படியை, மிதித்தால் கூட, அப்படி மிதிப்பது தவறு என்பதை சொல்லிக் கொடுங்கள்.

kamatchi-vilakku

தினந்தோறும் காலை வேளையிலும், மாலை வேளையிலும் வீட்டில் தீபம் ஏற்றுவது நல்லது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். வீட்டில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, விஷ்ணு சகஸ்ர நாமத்தையும், கந்த சஷ்டி கவசத்தையோ அல்லது அஷ்டலட்சுமி பாடல்களையோ ஒலிக்க செய்வது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்கள் வீட்டுப் பொருட்களை, வெளியில் இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுப்பதாக இருந்தால், அதாவது காசு கொடுப்பதாக இருந்தாலும் சரி, இல்லை வேறு ஏதாவது பொருட்களை கொடுப்பதாக இருந்தாலும் சரி, ஒருவர் நில வாசப்படியில் வெளியிலும், ஒருவர் நில வாசப்படியின் உள்பகுதியிலும் இருந்து எந்த ஒரு பரிமாற்றத்தையும் செய்து கொள்ளக்கூடாது. கொடுப்பவர் பெறுபவர், இருவருமே வாசப்படிக்கு உள் இருக்க வேண்டும். அல்லது இலவச படிக்கு வெளியே இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

crystal-lingam2

உங்களுடைய வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கிறது. ஆனால், சூழ்நிலை காரணமாக அந்த இடத்தை, இடித்தோ அல்லது மாற்றியோ உங்களால் அமைக்க முடியவில்லை. என்ன செய்யலாம்? சிறியதாக ஒரு ஸ்படிக லிங்கத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். சிறிய அளவு கண்ணாடி பாத்திரத்திலோ, பீங்கான் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த ஸ்படிக லிங்கத்தை அதனுள் வைத்து, அதில் ஒரு பூ போட்டு வாஸ்து குறைபாடு உள்ள இடத்தில் வைத்து விடுங்கள். ஆனால், கட்டாயம் அந்த தண்ணீரையும் பூவையும் மாற்ற வேண்டும். உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும் இடத்தில், இந்த ஸ்படிக லிங்கத்தை வைத்து விட்டால் அந்த வாஸ்து குறை பாட்டினால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டை எந்த கெட்டதும் நெருங்காமல் இருக்க ‘பச்சைமிளகாயை’ முறையாக இப்படி கட்டுங்கள். அப்புறம் பாருங்கள் அதிசயத்தை!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aanmeega kurippugal in Tamil. Aanmeega kurippugal. Aanmeega thagaval in Tamil. Aanmeega tips in Tamil. Aanmeega tips Tamil.