ஜுவாலாமுகி திருக்கோவில் வரலாறு

jwalamukhi
- Advertisement -

ஜுவாலாமுகி
சக்திதேவி பல்வேறு வடிவங்களில், பல்வேறு பெயர்களைக் கொண்டு, உலகமெங்கும் கோவில் கொண்டு பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் காத்து வருகின்றாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. புராணக் கதையின்படி ஒரு முறை சிவபெருமான் சக்திதேவியின் பூத உடலை தூக்கிக்கொண்டு கோரத் தாண்டவம் ஆடியபோது சக்தி தேவியின் உடலானது சிதைக்கப்பட்டு இந்த பூமியில் 51 இடங்களில் சக்தி பீடமாக விழுந்தது. அவற்றுள் ஜுவாலாமுகி ஒன்பதாவது இடமாக விளங்குகின்றது. சக்தி தேவியின் நாக்கு பகுதி விழுந்த இடம்தான் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள இந்த ஜ்வாலாமுகி திருத்தலம்.

 jwalamukhi

இந்தத் திருத்தலத்தில் சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். காலம் காலமாக இந்த இடங்களில் இருக்கும் பழமையான பாறையின் இடுக்குகளில் இருந்து நீலநிறமான தீ ஜுவாலைகள் இயற்கையாகவே அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றது. இப்படி ஒன்பது இடங்களில் எரிந்து கொண்டிருக்கின்ற தீ ஜுவாலைகளை தேவியின் வடிவம் என்று கருதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் சக்தி தேவியானவள் காளிதேவி ரூபத்தில் காட்சி தருகின்றார். இந்தப் பாறைகளின் இடுக்கில் எறியப்படும் தீயானது எப்படி எரிகின்றது என்பது இதுவரை யாரும் அறியப்படாத ஒரு ரகசியமாகவே தான் இன்றளவும் இருந்துவருகிறது.

- Advertisement -

தல வரலாறு
பல வருடங்களுக்கு முன்பு பூமிசந்த் என்னும் மன்னன் காங்க்ரா நகரத்தை தலைநகரமாக கொண்டு இந்த கோவில் இருக்கும் பகுதியை ஆண்டு வந்தான். இந்த மன்னர் ஒரு சிறந்த தேவி பக்தர். மன்னரின் கனவில் தோன்றிய சக்தி தேவியானவள் தீச்சுடரின் வடிவில் அம்பாள் வீற்றிருக்கும் இடத்தை மன்னருக்கு தெரியப்படுத்தினாள். அந்த இடத்தைத் தேடி கண்டுபிடித்த மன்னன் ஜுவாலாமுகிக்கு ஆலயத்தை எழுப்பினார்.

 jwalamukhi

காலப்போக்கில் ஆட்சிகள் மாறிக்கொண்டே இருந்தது. அதன் பின்னர் இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய பேரரசர் அக்பர், இந்த ஆலயத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு எரிந்து கொண்டிருக்கும் தீ ஜுவாலைகளை அணைக்க முயற்சி செய்தார். தனது வீரர்கள் நீரை ஊற்றி, பல முயற்சிகளை செய்தும் அந்த தீ ஜுவாலைகள் அணையவில்லை. இதன் மூலம் தேவியின் சக்தியை உணர்ந்த அக்பர் ஒரு தங்க குடையை இந்த கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தி தனது வேண்டுதல்களை நிறைவேற்றும் படி தேவியிடம் வேண்டிக்கொண்டார். தேவியானவள் அக்பரின் வேண்டுதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அவர் அளித்த தங்கக் குடையானது சாதாரணமான உலோகமாக மாறிவிட்டது என்று கூறுகிறது வரலாறு.

- Advertisement -

 jwalamukhi

பலன்கள்
பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டால் நன்மை நடக்கும். நம் எதிரிகள் நம் மேல் ஏவி விடப்படும் கெட்ட சக்திகள் நம்மை தாக்காமல் இருக்கும் என்பது நம்பிக்கை. மந்திர தந்திர வித்தைகளை செய்பவர்கள் எந்திர பூஜையை இந்த கோவிலில் செய்கிறார்கள்.

 jwalamukhi

செல்லும் வழி
ஜுவாலாமுகி திருத்தலமானது இமாச்சல பிரதேசம், காங்கிராவில் இருந்து சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

- Advertisement -

தரிசன நேரம்:
காலை 04.30AM – 11.00PM

முகவரி:
அருள்மிகு ஜுவாலாமுகி திருக்கோவில்
காங்ரா,
இமாச்சலப் பிரதேசம் 176031.

தொலைபேசி எண்
+91 01970-222223, 01970-222137.

இதையும் படிக்கலாமே
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் வரலாறு

English Overview:
Here we have Jwalamukhi temple history in Tamil. Jwalamukhi temple fire. Jwalamukhi temple timings. Jwalamukhi temple details.

- Advertisement -