ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை வழிபாடு செய்வது பலரது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்று எந்த முறையில் நாம் வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்றும் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நாளை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 3:48 மணிக்கு மேல் பஞ்சமி திதி ஆரம்பம் ஆகிறது. அதனால் அன்றைய தினம் மாலை 4:00 மணியிலிருந்து 4:40 மணி வரை அல்லது 5:50 லிருந்து 6:40 வரை அல்லது 8 மணியில் இருந்து 9 மணி வரை அல்லது 10:20 மணியிலிருந்து 11:10 மணி வரை இருக்கக்கூடிய நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி வாராஹி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக கருப்பு உளுந்தில் செய்யப்பட்ட பொருட்களை வைக்க வேண்டும். அதேபோல் பனங்கருப்பட்டியால் செய்யப்பட்ட பொருட்களையும் வைக்க வேண்டும். கிழங்கு வகைகள் போன்றவற்றையும் வைத்து வழிபாடு செய்யலாம். நாளைய தினம் வாராஹி அம்மனுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான பூக்களால் அலங்காரம் செய்வது அர்ச்சனை செய்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இதோடு மட்டுமல்லாமல் எப்பொழுதும் போல் வாராகி அம்மனுக்கு பஞ்சமுக தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு சிலர் பஞ்சமி திதியில் தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அப்படி தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்கள் நாளைய தினம் யாராவது கஷ்டப்படும் ஒரு நபருக்கு ஏதாவது ஒரு பொருளை தானமாக தர வேண்டும். அடுத்ததாக நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு சில சூட்சுமங்களை நாம் கையாள வேண்டும்.
திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் திருமணம் தடைப்பட்டு இருக்கிறது என்று நினைப்பவர்களும் விரலி மஞ்சள் மாலை கட்டி வாராகி அம்மனுக்கு சாற்றி வழிபாடு செய்ய விரைவிலேயே திருமணம் நடைபெறும். இதே போல் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும், பண வசியம் ஏற்பட வேண்டும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏலக்காய் மாலையை வாராகி அம்மனுக்கு சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். தீராத நோயால் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் லவங்கமாலை கட்டி வாராஹி அம்மனுக்கு சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
மஞ்சள், ஏலக்காய், கிராம்பு இவை மூன்றும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எத்தனை எண்ணிக்கை வேண்டுமானாலும் வைத்து நாம் கட்டி மாலையாக அம்மனுக்கு போடலாம். குறைந்தது மூன்றில் இருந்து உங்களுடைய வசதிக்கேற்ப ஏற்ற எத்தனை வேண்டுமானாலும் வைத்து கட்டலாம். ஒற்றைப்படையாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம். இந்த முறையில் நாம் மாலை சாற்றி வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே சுபகாரிய தடை நீங்க வழிபாடு
வாராஹி அம்மனை முழு மனதோடு நம்பி வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொடுப்பாள் வாராஹி அம்மன். முழு மனதுடன் முழு நம்பிக்கையுடன் வாராகி அம்மனை வழிபாடு செய்து நல்ல பலன்களை பெறலாம்.