பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது அம்மனின் வழிபாட்டிற்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்மனின் அருளை பரிபூரமாக பெறுவதற்குரிய வழிப்பாட்டு முறையை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வினைகளை தீர்க்கும் ஆவணி வெள்ளி வழிபாடு
ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்ற தாய் என்பவள் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல்தான் இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அம்பாலும் மிகவும் முக்கியமான ஒரு தெய்வமாக கருதப்படுகிறாள். நாம் எவ்வளவுதான் தவறுகளை செய்தாலும் எவ்வளவுதான் அந்த அம்மனை நிந்தித்தாலும் தாயே நீயே சரணாகதி என்று அவளின் திருப்பாதங்களில் சரணாகதி அடையும் பொழுது குழந்தையை பெற்ற தாய் பாவிப்பது போல வாரி அனைத்து நம்முடைய துயரங்களை நீக்கி நமக்கு நன்மைகளை தரக்கூடிய அற்புத தெய்வமாக திகழ்பவள் அம்பிகை.
ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். எந்த அளவிற்கு பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்களோ? அதே அளவிற்கு நிலை வாசலையும் சுத்தம் செய்து மஞ்சள் தடவி குங்குமம் வைத்து மலர்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில் அம்பிகையை நினைத்து நாம் வழிபாடு செய்யும் பொழுது அந்த வழிபாட்டின் பலனால் நமக்கு நன்மைகள் பல உண்டாகும். அதிலும் குறிப்பாக நாம் செய்த தீவினைகள் அனைத்தையும் நீக்கி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை அகற்றக் கூறிய அம்மனின் மந்திரத்தின் பல நாள் பலனை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
இந்த மந்திரத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து கூறலாம். பூஜை அறையிலோ அல்லது வீட்டில் ஏதாவது ஒரு அறையில் அமைதியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் கிழக்கு முகமாக பார்த்து அமர்ந்து கூற வேண்டும். தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கூறுவது என்பது மிகவும் சிறப்பு. இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக விநாயகரின் வழிபாட்டையும் குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு விட்ட பிறகு இந்த மந்திரத்தை கூறுவது என்பது நல்ல பலனை தரும் இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 333 முறை கூற வேண்டும். இதில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்பதால் எந்த அளவிற்கு உங்களுடைய வேலைகளை நிறைவு செய்துவிட்டு இந்த மந்திரத்தை கூறுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மந்திரம்
“ஓம் நமோ பார்வதி தேவியை நம”
இதையும் படிக்கலாமே: மன உளைச்சல் நீங்கி நிம்மதியாக இருக்க
மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை ஆவணி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று முழு மனதோடு அம்மனை நினைத்து கூறுபவர்களுக்கு அவர்களுடைய கர்ம வினைகளும் தீவினைகளும் நீங்கி நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.