இன்றைய காலகட்டத்தில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி. சப்த கன்னிகளில் ஐந்தாவது தெய்வமாக திகழக்கூடிய இந்த வாராகி அம்மனை பஞ்சமி திதி அன்று முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரத்தை வாராகி அம்மன் தருவாள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனுக்கு எந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபட்டால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
வாராகி அம்மனுக்கு உகந்த திதியான பஞ்சமி திதி என்பது தேய்பிறை பஞ்சமி வளர்பிறை பஞ்சமி என்று இரண்டு முறை வரும். இதில் தேய்பிறை பஞ்சமி என்பது நம்முடைய கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய பஞ்சமியாகவும், வளர்பிறை பஞ்சமி என்பது குழந்தை வரம், திருமண வரம், சொந்த வீடு வாங்குதல், செல்வ செழிப்பு போன்ற வேண்டுதலை நிறைவேற்றுவதற்குரிய திதியாகவும் கருதப்படுகிறது.
ஆவணி மாதத்தில் தேய்பிறை பஞ்சமி என்பது வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்து சனிக்கிழமை அன்று நிறைவடைகிறது. அந்த திதி நடைபெறும் தினத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டால் நம்முடைய சகல பிரச்சனைகளும் தீரும். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு மேல் செய்யலாம். அப்படி வெள்ளிக்கிழமை செய்ய இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளோ செய்யலாம்.
எப்பொழுதும் பஞ்சமி திதி அன்று எப்படி வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்வோமோ அதேபோல் விரதம் இருந்து வழிபாடு செய்து கொள்ளலாம். சாம்பிராணி தூபம் அனைத்தும் போட்டு முடித்த பிறகு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு அகல் விளக்கை சுத்தம் செய்த அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலில் நிறைய கல் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். மற்றும் ஒரு அகல் விளக்கில் 27 என்ற எண்ணிக்கையில் மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கல் உப்பு வைத்திருக்கும் அகலின் மீது ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான நல்லெண்ணையை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு அருகிலேயே மிளகு வைத்திருக்கும் அகல் விளக்கை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதிலும் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு மாதுளம் பழம் முத்துக்களை 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து வைத்துக்கொண்டு வாராகி அம்மனின் 108 போற்றிகளை கூறி வாராகி அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
108 போற்றிகள் தெரியாது என்பவர்கள் “ஓம் வாராகி தாயே போற்றி” என்றும் கூறலாம் “ஓம் பஞ்சமி நாயகியே போற்றி” என்றும் கூட கூறலாம். இப்படி கூறி வழிபாடு செய்ய வேண்டும். எண்ணெய் தீரும் பொழுது விளக்கை குளிர வைத்து விடுங்கள். இந்த விளக்கு அப்படியே இருக்கட்டும். சனிக்கிழமை அன்று மாலை நேரத்தில் இந்த அகல் விளக்கில் இருக்கக்கூடிய உப்பு மற்றும் மிளகை ஒரு பேப்பரில் எடுத்து வைத்து அதனுடன் கற்பூரம் வைத்து வீட்டு வாசலுக்கு வெளியே வைத்து எரித்து விட வேண்டும்.
அப்பார்ட்மெண்டில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் பால்கனியில் வைத்து எரித்து விடலாம். எரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைப்பவர்கள் அதை ஒரு கவரில் போட்டு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று யார் காலும் படாத இடத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் போட்டு விட்டு வர வேண்டும்.
இதையும் படிக்கலாமே சொந்த வீடு கட்ட சிறுவாபுரி முருகர் திருப்புகழ்
இந்த எளிமையான தீப பரிகாரத்தை பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை முழு மனதோடு நினைத்து செய்பவர்களுக்கு அவர்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.