சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சொந்த வீடு கிடைக்கும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். எல்லோராலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இந்த சிறுவாபுரி முருகனை சென்று தரிசனம் செய்ய முடியாது, பரவாயில்லை. வீட்டில் இருந்தபடியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகனை, சிறுவாபுரி முருகனாக நினைத்து, செவ்வாய் கிழமை தோறும் பின் சொல்லக்கூடிய இந்த பதிகத்தை படித்தாலே போதும் நிச்சயமாக உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கூடிய சீக்கிரம் கை கூடி வரும்.
செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணிக்கு இந்த வழிபாட்டை செய்யலாம். முடியாது என்பவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6:30 முப்பதுக்கு இந்த வழிபாட்டை செய்யலாம். பூஜை அறையில் இருக்கும் முருகர் திருவுருவப்படத்திற்கு சிவப்பு நிற செவ்வரளி பூக்களை வாங்கி வையுங்கள். உங்களுடைய வீட்டில் வேல் இருந்தால் அந்த வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்கவும்.
உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே அமர்ந்து மனமுருக உங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீடு வாங்க நிலம் தேவை என்றாலும் பிரார்த்தனை வைக்கலாம். வாங்கிய நிலத்தில் பிரச்சனை, வாங்கிய நிலத்தில் வீடு கட்ட தடை இருக்கிறது, என்றாலும் அந்த தடைகளை உடைக்க பிரார்த்தனை வைக்கலாம். உங்கள் பிரச்சனை எதுவோ அதற்கு தகுந்தபடி பிரார்த்தனை வைத்துவிட்டு பின் சொல்ல கூடிய இந்த பதிகத்தை படியுங்கள்.
சொந்த வீடு கட்ட பாட வேண்டிய திருப்புகழ் சிறுவாபுரி
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
இந்த பாடலை உச்சரிப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், இந்த பாடலை யூடியூபில் ஒலிக்கச் செய்யுங்கள். 2 அல்லது 3 முறை இந்த பாடலை காதால் கேட்டு கூடவே இந்த பாடல் வரிகளை படிக்கும் போது, உங்களுக்கு தானாகவே இந்த பாடலை சுலபமாக படிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்துவிடும். பிறகு நீங்கள் உங்கள் வாயால் இந்த பாடலை பாடி சிறுவாபுரி முருகனை மனதார நினைத்து வழிபடுங்கள்.
நிச்சயம் சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் உங்களுக்கு வந்து சேரும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்ல முடியும் என்றால் ஒரு செவ்வாய் கிழமை சென்று முருகனுக்கு செவ்வரளி பூக்கள் வாங்கி கொடுத்து, சிவப்பு நிற வஸ்திரம் தானம் செய்து, இந்த திருப்புகழ் புத்தகத்தை வாங்கி முருகப்பெருமான் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து அதைக் கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து, அந்த புத்தகத்தில் பாடலை படிப்பதில் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: 21 நாளில் இழந்ததை மீட்டு தரும் பரிகாரம்
வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் இதை செய்யுங்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் சிறுவாபுரி முருகனை மனதார நினைத்து உங்கள் வீட்டு பூஜை அறையிலையே இந்த வழிபாட்டை செய்யும் போதும், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.