கை ரேகையை வைத்து ஆயுளை கணிப்பது எப்படி ? பார்ப்போம் வாருங்கள்

Kai regai Jothidam

உயிர்கள் அனைத்துக்குமே உயிர்வாழும் வேட்கை இயற்கையானதே. அதிலும் பல வகையான இன்பங்களை அனுபவிக்க ஆசைகள் அதிகம் கொண்ட மனிதர்களுக்கு நீண்ட காலம் உயிர் வாழும் ஆசை அதிகம். அப்படி ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ்வதை பற்றி கூறும் ரேகை தான் “ஆயுள் ரேகை”. இந்த ஆயுள் ரேகையைப் பற்றிய சில பொதுவான விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aayul regai
Aayul regai

இந்த ஆயுள் ரேகை ஒரு நபரின் ஆட்காட்டி மற்றும் கட்டை விரலுக்கு நடுப்பகுதியிலிருந்து அந்த கட்டை விரலின் அடிப்பகுதி வரை செல்லும் ரேகை ஆயுள் ரேகையாகும்.

இந்த ஆயுள் ரேகை நல்ல நிறத்தில், பின்னல்கள் ஏதுமின்றி கையின் மணிக்கட்டு வரை நீண்டிருந்தால் அந்த நபருக்கு குறைந்தது 80 முதல் 100 ஆண்டுகள் வரையான ஆயுள் உண்டு.

ஆயுள் ரேகை இடையிடையே மெலிந்தும், தொடர்பின்றியும் காணப்பட்டால் அந்த நபர் பல விதமான உயிருக்கு ஆபத்தான கண்டங்களை எதிர்கொள்வார்.

kairegai

ஆயுள் ரேகையில் வேறு ஏதேதேனும் ரேகைகள் குறுக்கிட்டால் அந்த நபருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏதேனும் ஒரு வகை கஷ்டம் உண்டாகும்.

- Advertisement -

ஆயுள் ரேகை அதிக நீளமுள்ளவர்களுக்கு அதிக சந்ததிகள் பிறக்கும் அமைப்பு இருக்கும்.

ஆயுள் ரேகை மிக மெலிதாகவும், லேசாகவும் இருந்தால் அந்த நபர் மிகவும் பலவீனராகவும், அடிக்கடி நோய் வாய்ப்படுபவராகவும் இருப்பார்.

இதையும் படிக்கலாமே:
அறிவை குறிக்கும் புத்தி ரேகை உங்கள் கையில் எப்படி இருக்கிறது ? பார்ப்போம் வாருங்கள்

இது போன்ற மேலும் பல கை ரேகை ஜோதிடம் குறித்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we described about the Aayul regai in hand. If that particular regai is strong then that particular person will be healthy and live for a long time.