அறிவை குறிக்கும் புத்தி ரேகை உங்கள் கையில் எப்படி இருக்கிறது ? பார்ப்போம் வாருங்கள்

8296
kai regai
- விளம்பரம் -

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் அறிவுக்கூர்மையும் அவரது புத்தி ரேகையின் (Head Line) அமைப்பிலே அடங்கி இருக்கிறது என்று கை ரேகை ஜோதிடம் கூறுகிறது. இதனை பொறுத்தே ஒருவரால் தொழிலில் சிறப்படைய முடியும். அந்த வகையில் உங்கள் கையில் இருக்கும் புத்தி ரேகை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

puthi-regai

உள்ளங்கையின் நடுவில், ஆயுள் ரேகைக்கு மேலும் இருதய ரேகைக்குக் கீழேயும் அமைந்திருப்பதே புத்தி ரேகை. மேலே உள்ள படத்தை பார்க்கவும். புத்தி ரேகையில் பல விதமான அமைப்புகள் இருப்பதால், ஒவ்வொரு அமைப்பிற்கான தனி பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களது ரேகைக்குரிய பலனை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

- Advertisement -

1. ஆயுள் ரேகையின் ஆரம்பப் பகுதியிலிருந்து தொடங்கி, ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டோ, அல்லது வெட்டிக்கொண்டோ உள்ளங்கையின் மறுபக்கம் வரை நீண்டு செல்லும் (படம் கீழே உள்ளது). இந்த வகை புத்தி ரேகை உடையவர்கள் அறிவாற்றல் கொண்டவர்களாகவும், உணர்ச்சிவசப்படாமல் அறிவின் திறத்தினால் ஆராய்ந்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

kai regai

2. ஆயுள் ரேகையை, தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கையின் மையப்பகுதியோடு குட்டையான ரேகையாக இது முடிந்துவிடலாம் (படம் கீழே உள்ளது). இத்தகைய ரேகையை உடையவர்கள், நல்ல சிந்தனையாளர்கள், உலக அறிவும், அனுபவ அறிவும் உடையவர்கள். கல்வி வாய்ப்புகள் தடைப்பட்டாலும், இயற்கையாகவே அறிவாற்றல் மிக்கவர்கள்.

kai regai3. ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்துவிடலாம். (படம் கீழே உள்ளது). இப்படியான புத்தி ரேகை அமைந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வி, கலை, பொது அறிவு அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். ஏதாவது ஒரு திறமையைப் பயன்படுத்தி, வெற்றி காணும் வாய்ப்பு இவர்களுக்கு நிறைய உண்டு.

kai regai4. ஆயுள்ரேகையின் ஆரம்பப் பகுதியைத் தொடாமல், சற்றுத் தள்ளி ஆரம்பித்து நீளமாகவோ, குட்டையாகவோ, கிளைகளாகவோ பிரிந்தும் புத்தி ரேகை செல்லலாம் (படம் கீழே உள்ளது). இவ்வகையிலான புத்தி ரேகை அமைந்தவர்கள் அறிவாற்றலும், விவேகமும்  கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கைச் சம்பவங்களை அறிவுபூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் சற்று குறையும்; அனுபவபூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் அதிகரிக்கும். இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகளும் அதிகம் உண்டு.

kai regai5. புத்தி ரேகை ஆயுள் ரேகையைத் தொட்டுக்கொண்டு ஆரம்பிக்காமல், இருதய ரேகை ஆரம்பமாகும் இடத்தில் அந்த ரேகையுடன் பின்னிக்கொண்டு தொடங்கி உள்ளங்கை வரையிலும் நீண்டிருந்தால் (படம் கீழே உள்ளது), உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள். கல்வியில் விருப்பம் குறைவு. எதையும் திட்டமிட்டு செயல்பட விரும்ப மாட்டார்கள். சந்தர்ப்பவாதிகளாய் இருப்பார்கள். இவர்கள் சாமர்த்தியமாக அறிவாற்றலை பயன்படுத்தும்போது விவேகியாகவும், உணர்ச்சி வயப்படும்போது உணர்ச்சிபூர்வமாகவும் செயலாற்றுவார்கள். தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், அரசியல் மேதைகள் ஆகியோருக்கு இத்தகைய அமைப்பு இருக்கும்.

kai regaiமேலே குறிப்பிட்ட ஐந்து வகைகளைத் தவிர, வேறு வித்தியாசமான அமைப்புகளும் உண்டு. அவை பற்றியும், புத்தி ரேகையின் கிளைகள், அந்த ரேகையை குறுக்கிடும் வேறு ரேகைகளால் உண்டாகும் விளைவுகள், புத்தி ரேகையின் மீது அமைந்துள்ள குறியீடுகளால் ஏற்படும் பலன்கள் ஆகியவற்றையும் தெளிவாக அறிவது அவசியம்.

* புத்தி ரேகை, குரு மேட்டில் இருந்து ஆரம்பித்தாலும் அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை குரு மேட்டை நோக்கிச் சென்றாலும் புத்திசாலியாகவும், திட்டமிட்டு செயலாற்றுபவர்களாகவும் இருப்பார்கள். நேர்மை, எழுத்துத் திறமை, கலைத் திறமை, சிறப்பான வாழ்க்கை அமையும்.

* புத்தி ரேகை சனி மேட்டை நோக்கி வளைந்திருந்தாலோ, அல்லது ஒரு சிறிய ரேகை சனி மேட்டை நோக்கிச் சென்றாலோ திறமை, அறிவு ஆகியவற்றுடன் ஆணவமும், அதிகாரப் பற்றும் மிகுந்திருக்கும். பொருளீட்டும் தன்மையும் மேலோங்கி நிற்கும். தானே எல்லோரிலும் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருக்கும்.

* புத்தி ரேகை சூரிய மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும் அல்லது புத்தி ரேகையிலிருந்து சிறிய ரேகை சூரிய மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் கீழே உள்ளது) தெளிவான புத்திமானாகத் திகழ்வார்கள். கல்வி கலைகளில் சிறந்தவராகவும், புகழ் பெற்றவராகவும், நீதிமானாகவும் திகழ்வார்.

kai regai* புத்தி ரேகையின் கடைசிப் பகுதி, புதன் மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை புதன் மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் கீழே உள்ளது) தொழில் வியாபாரத்திலும், அறிவாற்றலால் பொருளீட்டுவதிலும் திறமை அதிகமாக இருக்கும்.

kai regai* புத்தி ரேகை சந்திரமேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையிலிருந்து கிளை ரேகை சந்திரமேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் கீழே உள்ளது) கலைகளில் ஈடுபாடு, சிறப்பான தொழில் கல்வி, வெளிநாட்டு பயணம், பெண்களால் மதிக்கப்படுதல், அகங்கார குணம் ஆகியன அமையும்.

kai regai* புத்தி ரேகை செவ்வாய் மேட்டில் முடிவடைந்தாலும், அல்லது கீழ் செவ்வாய்மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது ஒரு சிறிய ரேகை கீழ் செவ்வாய்மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் கீழே உள்ளது) தெளிவில்லாத அறிவு, திறமைக் குறைவு, அறிவைத் தவறாகப் பயன்படுத்துதல், முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம் ஆகிய பலன்கள் உண்டு.

kai regai* இரண்டு புத்தி ரேகைகள் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லுமானால் (படம் கீழே உள்ளது) உலகம் போற்றும் அறிவாற்றலும் அதிர்ஷ்டமும், எதிர்பார்க்காத வெற்றிகளும் உண்டாகும்.

kai regai* துண்டு துண்டாக முறிந்து செல்லும் அல்லது சங்கிலி போல் செல்லும் புத்தி ரேகை எனில், மிகக் குறைவான அறிவு, எதிலும் குழப்பம், தொடர் தோல்விகள் உண்டு.

புத்தி ரேகைக்கான பலன்கள் பார்ப்பது குறித்து வேறுசில தகவல்களும் உண்டு. மற்ற ரேகைகளின் தன்மையைப் பற்றி ஆராயும்போது, இதற்கான விளக்கங்களும் தெளிவாகும்.

பொதுவாக ஆயுள் ரேகையும் புத்தி ரேகையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருவரது வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள், செல்வம் செல்வாக்கு, பதவி, அதிகாரம், புகழ், குடும்ப வாழ்க்கை, ஆயுள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆயுள் ரேகையும், புத்தி ரேகையுமே நிர்ணயிக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியானது இருதய ரேகை. அதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.

Advertisement