உங்க வீட்டு செடிகளுக்கு தண்ணீர் ஸ்ப்ரே செய்வீங்களா? இந்த சூப்பரான ரகசியத்த முதல்ல தெரிஞ்சுகிட்டு அப்புறமா பண்ணுங்க!

plant-spray-onion
- Advertisement -

நம் வீட்டில் வளர்க்கும் எல்லா வகையான செடிகளுக்கும், கொடிகளுக்கும் தண்ணீரை ஸ்பிரே செய்வது நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும். ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீரை அடைத்து வீட்டில் இருக்கும் பூச்செடி முதல் காய்கறி செடிகள் வரை எல்லாவற்றிற்கும் தண்ணீரை ஸ்பிரே செய்வோம். இப்படி சாதாரண தண்ணீரை ஸ்பிரே செய்வதற்கு பதிலாக சத்துள்ள டானிக் போன்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயாரித்து ஸ்பிரே செய்து வந்தால் எந்த செடிகளும் பூச்சிகள் இல்லாமல் பச்சை பசேலென செழித்து வளரும். அதை எப்படி செய்வது? என்பதை இப்பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

rose-plant-spray

செடிகள் வளர்ப்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம். ஆனால் இதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அந்த செடிகளில் இருக்கும் இலைகளை பூச்சிகள் தின்றுவிடும். சரியான உரங்கள் போடவில்லை என்றால், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கித் தெளிக்கவில்லை என்றால் செடிகளில் சத்துக்கள் இல்லாமல் பூக்கள் பூப்பதிலும், காய்கள் கனிந்து வளர்ப்பதிலும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.

- Advertisement -

சாதாரணமாக வீட்டில் ஒரு ரோஜா செடி, மல்லி செடி வளர்த்தால் கூட அதில் இருக்கும் இலைகளை பூச்சிகள் அரித்து விடும். இதனால் பூக்களும் சரியாக பூக்காமல் போய்விடும். காய்கறி செடிகளை எடுத்துக் கொண்டால் வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற செடிகளில் நிறைய பூச்சிகளும், புழுக்களும் தாக்கும் அபாயம் உண்டு. இதனால் இது போன்ற செடி வகைகளை வீட்டில் வளர்ப்பது சிரமமாக இருக்கும்.

நீங்கள் பத்து பைசா கூட செலவே செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி பூச்சிக்கொல்லி மருந்தை தயார் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை தான் நாம் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம். அதில் முதலாவதாக வேப்பிலை இருக்கிறது.

- Advertisement -

வேப்பிலையை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக்கொண்டு அதில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து லேசாக அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். அதிகமாக கொதித்து விட கூடாது. ஒரு எட்டிலிருந்து பத்து நிமிடம் வரை கொதித்தால் போதும். பிறகு நன்கு ஆற விடவும். ஆறிய பின் ஒரு வடிகட்டி கொண்டு இலைகளை வடித்து தண்ணீரை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். வேப்பிலையில் இருக்கும் கசப்பு மற்றும் அதில் இருக்கும் சில மூலக்கூறுகள் செடிகளின் இலைகளை தாக்கும் பூச்சிகளை அழித்து விடும். மேலும் ஆரோக்கியமாகவும் செடிகளை வளர உதவும்.

அதேபோல் எந்தச் செடியை அல்லது காய்கறி வகைகளை செய்தாலும் முளைக்கும் பொழுது பச்சை பசேலென முளைக்காமல் மஞ்சளாக மாறிவிடும். இதற்கு இப்படி செய்து பாருங்கள். ஒரே ஒரு வெங்காயம், அதனுடன் நான்கு பல் பூண்டு மற்றும் 4 கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து இதை மிக்ஸியில் நன்றாக அரைத்து நீர்க்க தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்த இந்த கலவையை ஒரு துணியில் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வடிகட்டும் தண்ணீரில் கசடுகள் இருக்கக்கூடாது. இருந்தால் ஸ்ப்ரே பாட்டில் சென்று அடைத்துக் கொள்ளும்.

- Advertisement -

plant-spray

பின்னர் ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு இதை தினமும் வீட்டுச் செடி மற்றும் கொடிகளுக்கு ஸ்பிரே செய்து வந்தால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறாமல் பச்சை பசேலென பூத்துக் குலுங்கும். இதிலிருக்கும் கார அமிலத்தன்மை உங்கள் செடிகளைத் தாக்கும் எல்லாவிதமான பூச்சி தொற்றுகளில் இருந்தும் சிறந்த பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் வீட்டில் முயற்சி செய்து உங்கள் செடிகொடிகளை செழிப்பாக வளர வையுங்கள்.

இதையும் படிக்கலாமே
ரோஜா செடியில் பூக்கள் உதிராமல் கொத்துக்கொத்தாக பூக்க நீங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் இந்த 1 பொருள் போதுமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -