நாம் தினமும் சாப்பிடும் சாதத்தை இப்படி மட்டும் எப்போதும் செய்து விடாதீர்கள்! பாவம் வந்து சேருமாம்.

annapoorani-rice
- Advertisement -

நாம தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் அன்னபூரணி குடியிருப்பதாக ஐதிகம் உள்ளது. இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அன்னபூரணியை அவமதிப்பது என்பது மிகப்பெரிய பாவமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பணம் இல்லாமல் ஒருவரால் வாழ முடியும். உணவில்லாமல் யாராலும் வாழவே முடியாது அல்லவா? அந்த வகையில் பார்க்கும் பொழுது மகாலட்சுமியை விட அன்னபூரணி சக்தி வாய்ந்தவளாக தென்படுகிறாள். இப்பொழுது அன்னபூரணி பெரியவளா? மகாலட்சுமி பெரியவளா? என்கிற பட்டிமன்றம் நடத்தப் போவதில்லை. இரண்டும் ஒருவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். அதில் நாம் சாப்பிடும் சாதத்தை எப்படி எல்லாம் அவமதிக்க கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

rice

நாம் சாப்பிடும் சாதம் விளைவிக்கும் விவசாயிகள் இந்த யுகத்தில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? என்பதை நம் கண்முன்னே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். எல்லாம் தெரிந்திருந்தும் சர்வ சாதாரணமாக ஒரு குண்டான் சாதத்தை கூட குப்பையில் தூக்கி எறிகிறார்கள். இது எவ்வளவு பெரிய பாவம் என்று அவர்களுக்கு தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

சமைக்கும் பொழுது சரியான அளவில் சமைக்க கற்றுக் கொண்டிருக்க வேண்டியது சமைப்பவரின் கடமையாகும். ஒரு கைப்பிடி அளவு சாதத்தை கூட வீணாக்கக் கூடாது என்பது நியதி. உங்கள் வாழ்நாளில் நீங்கள் எவ்வளவு சாதத்தை வீணாக்கி இருப்பீர்கள்? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்படி என்றால் உங்களுக்கு எந்த அளவிற்கு பாவம் சேர்ந்து இருக்கும் என்பதையும் யோசித்துப் பார்த்து கொள்ளுங்கள்.

rice

குழந்தைகள் சாப்பிடும் பொழுது சாதத்தை கீழே சிந்தி இருப்பார்கள். அல்லது நாமே கூட தெரியாமல் சிந்தி இருக்கலாம். அப்படி கீழே சிந்திய சாதத்தை கைகளால் தான் எடுக்க வேண்டும். சாதத்தை அன்னபூரணியாக கருதுவதால் துடைப்பத்தை கொண்டு வாரக் கூடாது என்கிறது சாஸ்திரம். இதை பலரும் அறியாமல் செய்கின்ற தவறாகும். எப்படி ஒரு ஹோமம் செய்தாலும், பூஜை, புனஸ்காரங்கள் போன்றவற்றை செய்தாலும் அவைகள் நிறைவடைந்த பின் பூஜை பொருட்களை துடைப்பம் படாமல் கைகளால் அல்லது துணி கொண்டு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ.. அதே போல் தான், சாதம் கீழே சிந்தி இருந்தாலும் துடைப்பம் படாமல் கைகளால் எடுத்து விட வேண்டும். தெரியாமல் இது போல் செய்தாலும் நமக்கு பாவம் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம். இப்போது தெரிந்து கொண்டீர்கள்! இனியும் அந்த பாவத்தை செய்தால் பாவம் இரட்டிப்பாகும் ஜாக்கிரதை.

- Advertisement -

அது போல் இரவு நேரங்களில் சாதத்தை வெளியில் சென்று கொட்டக் கூடாது. ஒரு சிலர் மிஞ்சிய சாதத்தை நாய், பூனை போன்ற பிராணிகளுக்கு வைப்பதுண்டு. அது போல் ஒரு ஜீவனின் பசியாற நீங்கள் இரவு நேரத்தில் சாதத்தை வெளியே வந்து கொட்டும் பொழுது அது தவறாகாது. ஆனால் நீங்கள் வைக்கும் சாதத்தை அவை முழுமையாக சாப்பிட்டு இருக்க வேண்டும். அதை ஒரு முறை கவனியுங்கள். இவ்வாறாக அல்லாமல் சாதத்தை வீணாக குப்பையில் கொட்டுவது மிகப்பெரிய பாவமாக சொல்லப்பட்டுள்ளது.

rice

இரவில் சாதம் செய்யும் பானையை முழுமையாக துடைத்து வழித்து எடுக்கக்கூடாது. அப்படி செய்தால் குடும்பத்தில் வறுமை உண்டாகும் என்பார்கள். கொஞ்சம் சாதப் பருக்கைகள் எப்போதும் பானையில் இருக்க வேண்டும். கழுவும் பொழுது மட்டும் சுத்தம் செய்தால் போதும். இரவு நேரத்தில் தெய்வங்கள் சமையலறையில் வருவதாக ஐதீகம் உள்ளது. அந்த நேரத்தில் சமையலறையில் எதுவுமே இல்லாமல் துடைத்து வைத்திருக்கக் கூடாது. கொஞ்சமாவது சாப்பிட ஏதாவது சமையலறையில் இரவு நேரத்தில் வைத்து விட்டு தூங்கச் செல்வது நல்லது.

- Advertisement -

rice-pot-satham-panai

இதனால் தான் அந்த காலத்திலெல்லாம் மிஞ்சிய சாதத்தை தண்ணீர் ஊற்றி சிறிதளவு கல் உப்பு போட்டு அடுப்பின் மேல் வைப்பார்கள். அவர்களிடத்தில் எப்போதும் இல்லை என்ற வார்த்தை வரவே வராது. இதனால் அவர்கள் மிகுந்த செல்வச் செழிப்புடன், ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என்பதைக் கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
வரும் செவ்வாய்க் கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை இப்படி வழிபட்டால் வறுமை நீங்கி செல்வம் பெருக்கெடுக்குமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -