ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் என்பது இருக்கும். ஒரு கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றொரு கஷ்டம் வந்து நம்மை மேலும் அதிக அளவில் கஷ்டப்படுத்தும். பலருக்கும் எந்த திக்கில் திரும்பினாலும் கஷ்டம் என்பது இருப்பது போலவே உணர்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை என்பது வரும். தொழிலிலும் பிரச்சனைகள் வரும். குழந்தைகள் ரீதியாகவும், உடல் நல ரீதியாகவும் பல விதங்களில் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள். இந்த கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு காலபைரவரை இந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கால பைரவர் வழிபாடு
காலத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் நமக்கு தண்டனைகளை தரக்கூடியவராக திகழ்பவர் சனி பகவான். அப்படிப்பட்ட சனி பகவானுக்கே குருவாக திகழக்கூடியவர் தான் காலபைரவர். காலபைரவரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்தோம் என்றால் சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட கஷ்டங்கள் மட்டும் தீராது வேறு எந்த கிரகத்தாலும் எந்த காலத்தினாலும் நமக்கு ஏற்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அவற்றை தீர்த்து வைத்து அருள் புரிய கூடியவராக தான் காலபைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட கால பைரவரை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
தீராத கஷ்டத்தால் பாதிக்கப்பட்டு வாழவே வழியில்லாமல் இருப்பவர்கள் கூட இந்த வழிபாட்டை செய்தார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்து கொண்டே வரும் பொழுது அவர்களின் கஷ்டங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். மேலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குரிய வாய்ப்புகளும் வந்து சேரும். இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக் கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கண்டிப்பான முறையில் கால பைரவரின் சன்னதி என்பது இருக்கும்.
அவ்வாறு சிவாலயத்திற்கு செல்லும் பொழுது கையில் ஒரு நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கிக்கொண்டு செல்லுங்கள். அங்கு இருக்கக்கூடிய காலபைரவரின் சன்னதியில் காலபைரவரின் பாதத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் இரண்டு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். சிவப்பு நிற மலர்களை வாங்கி கால பைரவருக்கு கொடுக்கலாம். தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைக்கலாம்.
இவற்றில் எதை தங்களால் செய்ய முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள். கால பைரவரிடம் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டி காலபைரவரை 11 முறை வலம் வர வேண்டும். இப்படி 11 முறை வலம் வந்த பிறகு காலபைரவரின் பாதத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை திரும்பவும் வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து மூட்டையாக கட்டி, வீட்டு நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.
இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் காலபைரவர் சன்னதிக்கு சென்று எலுமிச்சம் பழத்தை காலடியில் வைத்து வாங்கி வந்து வீட்டு நிலை வாசலில் வைக்க வேண்டும். பழைய எலுமிச்சம் பழத்தை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தீய சக்தியாக இருந்தாலும், நம்முடைய எப்பேர்பட்ட கெட்ட காலமாக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி நல்லதொரு வாழ்க்கை அமையும்.
இதையும் படிக்கலாமே:பண வரவு அதிகரிக்க பிப்ரவரி ஒன்றாம் தேதி செய்ய வேண்டிய செலவுகள்
முழுமனதோடு கால பைரவரை இந்த முறையில் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போவதோடு நல்ல வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.