அடகு வைத்த நகையை குறித்த நேரத்தில் மீட்க முடியவில்லையா? அப்படின்னா பூஜையறையில் இதை செய்யுங்க விரைவில் மீட்டு விடலாம்!

gold-lakshmi-salt
- Advertisement -

பொதுவாக புதிதாக வாங்கிய நகைகளை அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கவே முடியாத பட்சத்தில் நகைகளை அடகு வைத்து பணம் பெறுவது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அதற்குரிய சரியான வட்டியை கட்டி, குறித்த நேரத்தில் மீட்பது என்பது அதைவிட மிகவும் முக்கியமானது ஆகும். அப்படி நகை அடகு வைத்த பின்பு குறித்த நேரத்தில் மீட்க முடியாமல் போகின்ற பொழுது, அந்த நகை திரும்பவும் நம்மிடம் வருமா? என்கிற சந்தேகமும் எழுந்து விடுகிறது. இப்படி மீட்க முடியாத நகைகளை கூட மீட்பதற்கான எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

அடகு வைத்த நகைகள் மீது எப்பொழுதும் தனி கவனம் செலுத்த வேண்டும். நகை என்பது ஒரு பொருள் அல்ல, அது ஒரு சொத்து என்பதால் அடகு வைத்த நகையை எப்படியாவது குறித்த நேரத்திற்குள், குறித்த நாட்களுக்குள் மீட்டு விட வேண்டும் என்கிற வைராக்கியம் கொண்டிருக்க வேண்டும். நகை தானே எப்பொழுது வேண்டுமானாலும் மீட்டுக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்து விட்டால் கடைசியில் அதனை மீட்க முடியாமல் மூழ்கிப் போகும் அபாயம் உண்டு.

- Advertisement -

அடகு வைத்த நகையை மீட்க குறித்த நேரத்தில் பணம் கிடைக்காமல் போவது, வர வேண்டிய பணம் வராமல் போவது போன்ற பணத்தடை ஏற்படுவது நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் சாதகமற்ற நிலையை குறிக்கிறது. நேரம் சரியாக இல்லை என்றால் நாம் நினைத்த நேரத்தில் நம்முடைய நகையை மீட்க முடியாமல் போய்விடும். எனவே நகையை மீட்பதற்கு எந்த நாளில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை துவங்கலாம்.

பாற்கடலில் வாசம் செய்யும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல்லுப்பு என்பது தெய்வாம்சம் பொருந்திய ஒரு பொருள் ஆகும். எனவே இந்த கல் உப்பை பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி பாத்திரத்தில் நிரப்பி வையுங்கள். நீங்கள் பூஜை செய்யும் நாளன்று கல் உப்பை புதிதாக வாங்கி இருக்க வேண்டும். புதிதாக வாங்கிய கல் உப்பை நிரப்பி வைத்த பின்பு, தியான நிலையில் பூஜையில் அமர்ந்து கொள்ளுங்கள். பின்பு மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக் கொண்டு அவருடைய மந்திரங்களை உச்சரித்தபடி மஞ்சள் தூளை எடுத்து முதலில் கொஞ்சமாக கல் உப்பின் மீது தூவ வேண்டும்.

- Advertisement -

அதனை அடுத்து குங்குமத்தை இதே போல செய்ய வேண்டும். ஒரு முறை இப்படி செய்தால் போதும். கல் உப்பு, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றும் மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்கள் ஆகும். இதனை இப்படி செய்துவிட்டு ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து அடகு வைத்த நகைகளை மீட்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு நீங்கள் நகை வைக்கும் இடத்தில் இந்த உப்பை அப்படியே கொண்டு போய் வைக்க வேண்டும்.

பீரோவில் நகை வைப்பவர்கள், நகை இருக்கும் இடத்தில் இதனை எடுத்துக் கொண்டு போய் வைத்து அதன் அருகில் மற்ற நகைகளை வைக்க வேண்டும். இப்படி செய்ய அடகு வைத்த நகையை மீட்பதற்கான பணம் எப்படியாவது உங்கள் கைக்கு தேடி தானாகவே வந்து சேரும். இந்த பரிகாரத்தை சூரிய உதயத்திற்கு முன்பாக அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்பாக செய்ய வேண்டும். சூரியன் இருக்கும் பொழுது செய்யக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -