அடகு நகையை மீட்க பரிகாரம்

adaku nagai
- Advertisement -

சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து அந்த பணத்திற்கு ஒரு கிராம் இரண்டு கிராம் என்று நகைகளையும் சேர்த்து வைக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு சேர்த்த நகையை வீட்டில் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் பொழுது அடமானம் வைப்பதற்கும் தயங்க மாட்டார்கள். அப்படி அடமானம் வைத்த நகையை மீட்க முடியாமல் மூழ்கும் நிலைக்கு போகும் பொழுது எந்த தீபத்தை எப்படி ஏற்றி பரிகாரம் செய்தால் நகையை மீட்க முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பணம், நகை என்று சொல்லும் பொழுது அதற்கு அதிபதியாக மகாலட்சுமி தாயார் விளக்குகிறார். மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருள் கிடைத்தால் பணமும் நகையும் தாராளமாக சேரும். அடகு கடையில் இருக்கும் நகையையும் நம்மால் மீட்டெடுக்க முடியும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாருக்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு உரிய பொருட்களை வியாழக்கிழமையே வாங்கி வைத்துக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை அன்று காலை 4:00 – 10:00 மணிக்குள்ளும் இந்த நேரத்தில் செய்ய இயலாதவர்கள் மாலை 6:00 – 9:00 மணிக்குள்ளும் செய்யலாம். ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிவப்பு நிறத்தில் தாங்கள் அடமானம் வைத்திருக்கும் நகைகளை வரிசைப்படி எழுத வேண்டும்.

மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்து அதில் புதிதாக வாங்கிய கல் உப்பை பாதி அளவு நிரப்ப வேண்டும். பிறகு நாம் எழுதி வைத்திருக்கும் பேப்பரை மடித்து அதற்கு மேல் வைக்க வேண்டும். பேப்பருக்கு மேல் 5 ஏலக்காய், 5 கிராம்பு வைத்து அந்த கிண்ணம் நிறைய கல் உப்பை மறுபடியும் போட்டு நிரப்ப வேண்டும். பிறகு அதன் மேல் முகத்திற்கு பூசும் மஞ்சள் தூளை சிறிதளவு தூவி விட வேண்டும்.

- Advertisement -

இந்த கிண்ணத்தை நெய் தீபத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நெய் தீரும் நிலை வரும் பொழுது தீபத்தை குளிர வைத்துவிட்டு, உப்பு இருக்கும் இந்தக் கிண்ணத்தை எடுத்து பணம் சேர்த்து வைக்கும் இடத்திற்கு அருகில் வைத்து விட வேண்டும். மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 – 9:00 மணிக்குள் இந்த உப்பு இருக்கும் கிண்ணத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து அதில் உப்பு ஏலக்காய் கிராம்பு இவற்றை மட்டும் போட வேண்டும்.

எழுதி வைத்திருக்கும் லிஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உப்பு கரையும் வரை நன்றாக கலக்கி விட்டு இந்த தண்ணீரை ஓடும் நீரில் ஊற்றி விடலாம் அப்படி இல்லை என்றால் கால் படாத அளவிற்கு ஏதாவது ஒரு மரத்தடியில் ஊற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக விளக்கு பூஜை

இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக பெற்று மூழ்கும் நிலையில் இருக்கும் தங்கத்தையும் மீட்டெடுக்கும் அளவிற்கு பணவரவு கிடைக்கும்.

- Advertisement -