- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅடகு நகையை மீட்க செவ்வாய்க்கிழமை பரிகாரம்

அடகு நகையை மீட்க செவ்வாய்க்கிழமை பரிகாரம்

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்து நகை வாங்கி வைக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு கஷ்டமான சூழ்நிலை வரும் பொழுது பிறரிடம் இருந்து கடன் வாங்குவதற்கு பதிலாக நம்முடைய நகையை அடமானத்தில் வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவும் செய்வார்கள். அப்படி செய்த பிறகு அவர்களால் அந்த நகையை திருப்ப முடியாத சூழ்நிலை உண்டாகும். அதையும் மீறி திருப்ப முயற்சி செய்தாலும் திரும்பவும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அடமானத்திற்கு சென்று விடும். இதுவும் ஒருவகையான கடன் தான். நகை கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செவ்வாய்க்கிழமை பரிகாரம்

கடன் பிரச்சனைக்கு முக்கியமான காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் நம்மால் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அதனால் கடன் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாகவும் செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக முருகப்பெருமான் திகழ்வதால் செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் கடன் பிரச்சனையை தீர்க்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நாம் செய்யலாம். இதற்கு நமக்கு மூடி போட்ட ஒரு டப்பா ஒன்று வேண்டும். அது கண்ணாடி டப்பாவாகவும் இருக்கலாம், பிளாஸ்டிக் டப்பாவாகவும் இருக்கலாம், சில்வர் டப்பாவாகவும் இருக்கலாம். அதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஐம்பது ரூபாய் நோட்டு வேண்டும். இந்த 50 ரூபாய் நோட்டிற்குள் காம்பு உடையாத ஒரு விரலி மஞ்சள், ஒரு வசம்பு துண்டை வைத்து அந்த 50 ரூபாய் நோட்டை நன்றாக சுருட்டி சிவப்பு நிற நூலை கொண்டு நன்றாக கட்டிக் கொள்ளுங்கள். கட்டிய இந்த 50 ரூபாய் நோட்டை துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிற்குள் வைத்து மூடி விட வேண்டும். இதை வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

சரியாக 48-வது நாள் இதில் இருக்கக்கூடிய துவரம் பருப்பை எடுத்து கால் படாத எறும்புகள் இருக்கக்கூடிய இடத்தில் போட்டு விட வேண்டும். 50 ரூபாய் நோட்டை நூலை பிரிக்காமல் அப்படியே அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலய உண்டியலில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே நமக்கு இருக்கக்கூடிய எந்த வகையான கடனாக இருந்தாலும் அவை தீர்வதற்குரிய வழி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:செல்வ வளம் பெருக விநாயகர் வழிபாடு

செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானை நினைத்து முருகப்பெருமானுக்கு முன்பாக இந்த ஒரு பரிகாரத்தை செய்பவர்களுக்கு விரைவிலயே அவர்களுடைய அடமானத்தில் இருக்கக்கூடிய நகை திரும்ப வீடு வந்து சேரும், கடன் பிரச்சனையும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்