அடகு வைத்த நகைகளை விரைவில் மீட்டெடுக்க உங்கள் பூஜை அறையில் இந்த சிறப்பு வாய்ந்த பரிகாரத்தை செய்திடுங்கள்

Nagai adamanam
- Advertisement -

ஒருவரின் வருமானம் என்பது நிலையானதாக இருப்பதில்லை. நல்ல வேலையில் இருக்கின்றோம், கை நிறைய சம்பாதிக்கிறோம் என்ற திருப்தியுடன் இருக்கின்ற நேரத்தில் வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும், திடீரென்று வேலை இழப்பு உண்டாகும். அல்லது வரவேண்டிய வருமானம் தடைபடும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு முதலில் அனைவரும் செய்யக் கூடிய ஒரு விஷயம் வீட்டில் உள்ள நகைகளை அடகிற்க்கு எடுத்துச் செல்வது தான். எவரிடமும் கைநீட்டி கடன் வாங்காமல் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்ய நமது நகைகளை அடகு வைத்து சமாளிப்பது தான் அந்த நேரத்திற்கான சரியான வழியாக இருக்கிறது. இப்படி பிரச்சனைகளை சமாளிக்க அடகு வைக்கப்படும் நகைகளை நாம் நினைக்கின்ற நேரத்திலும் மீட்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இவ்வாறு அவசரத்திற்கு அடகு வைக்கப்படும் நகைகளை கூடிய விரைவில் மீட்டெடுக்க செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் நகை அணிய ஆசை இருக்கும். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் பெண்கள் எப்பொழுதும் தனிப்பட்ட கவனம் செலுத்துவார்கள். அப்படி பெண்களுக்கு உரிமையான நகைகளை வீட்டின் பிரச்சினையை சமாளிப்பதற்கிக அடகு வைக்க கொண்டு செல்கின்றனர். இந்த நகைகளை குறிப்பிட்ட நேரத்தில் திருப்ப முடியாமல் போவதாலும், ஏதேனும் விஷேஷங்களுக்கு செல்லும்போதும் நகை இல்லால் இருப்பதாலும் பெண்களின் மனது மிகுந்த சஞ்ஜலத்திற்கு ஆளாகிறது.

- Advertisement -

குறிப்பிட்ட நேரத்தில் நகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் வர வேண்டிய பணம் கைக்கு வராமல் பல தடைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். அல்லது வருகின்ற பணத்திற்கு ஏற்ப வீண் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். எனவே அடகு வைத்த நகையை திருப்ப முடியாத சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும்.

இதற்காக வீட்டில் எப்பொழுதும் போல பூஜை செய்துவிட்டு, பூஜை அறையின் முன் அமர்ந்து ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் புதியதாக வாங்கிய கல்லுப்பை முழுவதுமாக நிறைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் மீது சிறிதளவு மஞ்சள் தூளைத் தூவி விட வேண்டும். பின்னர் அதற்கு மேல் சிறிதளவு குங்குமத்தை தூவ வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் பொழுது மகாலட்சுமி தேவியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்தப் பூஜையை வாரத்தில் எந்த கிழமை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இதனை காலை 10 மணிக்கு முன்னதாகவோ அல்லது மாலை 6 மணிக்கு மேற்பட்டோ தான் செய்ய வேண்டும். பின்னர் இந்த கல் உப்பு நிறைந்த கிண்ணத்தை பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் வைத்துவிட்டு, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து அதனை எடுத்து பீரோவில் நகை வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும்.

இந்தக் கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் மங்களகரம் வாய்ந்த மகாலட்சுமியின் அம்சங்களாகும். எனவே இவற்றின் பலனாக அடகு வைத்த நகை விரைவில் வீடு தேடி வரும். அதற்கான பணம் எந்தவித தடையுமின்றி எந்த வழியிலாவது உங்களைத் தேடி வரும்.

- Advertisement -