தங்க நகை என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அனைவரும் தங்களுடைய கஷ்ட காலத்தில் உணர்ந்திருப்பார்கள். கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த காசை வைத்து நகைகளை வாங்கினாலும் தங்களுடைய கஷ்ட காலத்தில் அந்த நகைகளை அடமானத்தில் வைத்து தான் பலரும் பல செயல்களை செய்திருப்பார்கள். அப்படி நம்முடைய கஷ்டத்திற்கு உதவக்கூடிய தங்க நகையை நாம் திருப்ப வேண்டும் என்று முயற்சி செய்வோம். அந்த முயற்சிகள் வெற்றி அடையாமல் போகும் பட்சத்தில் அதனால் மன வருத்தமே உண்டாகும். அப்படி அந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கும் நகையை திருப்புவதற்கும் சிவபெருமானை நினைத்து செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே பணம் நகை போன்றவற்றிற்கு அதிபதியாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி மற்றும் குபேரர். இந்த இருவருக்கும் செல்வ செழிப்பை வாரி வழங்கியது சிவபெருமானே. ராவணனின் உடன் பிறந்தவராக இருக்கக் கூடியவர் தான் குபேரர். ராவணன் குபேரரிடம் இருக்கக்கூடிய அனைத்து வித செல்வங்களையும் எடுத்துக் கொண்டாராம். அப்பொழுது குபேரர் சிவபெருமானை நினைத்து தவம் செய்தாராம். அப்படி அந்த தவத்தின் விளைவால் சிவபெருமான் அனைத்து விதமான செல்வங்களையும் கொடுத்து ரட்சித்தார் என்று கூறப்படுகிறது.
இதே போல்தான் மகாலட்சுமி தாயாரும் தனக்கு ஐஸ்வர்யங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானை நினைத்து தவமிருந்தார் என்றும் அந்த தவத்தின் பலனால் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஐஸ்வர்யம் அனைத்தையும் வழங்கிய ஈஸ்வரனை ஐஸ்வரேஸ்வரர் என்று கூறுவார்கள். இன்றும் முசிறி அருகில் ஐஸ்வரேஸ்வரர் ஆலயம் என்பது இருக்கிறது.
அந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்களுக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்றும் அவர்களுடைய கஷ்டங்கள் தீரும் என்றும் கூறப்படுகிறது. சரி இப்பொழுது பரிகாரத்திற்கு வருவோம். இந்த பரிகாரத்தை நாம் காலையில் எழுந்த உடனே செய்ய வேண்டும். கண் விழித்த உடனே செய்ய வேண்டும். இதற்கு நாம் முகம் கழுவ வேண்டும், வாய் கொப்பளிக்க வேண்டும், பல் விலக்க வேண்டும், குளிக்க வேண்டும், விளக்கேற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
பொதுவாக நாம் உறங்கி கண்விழித்ததும் சுறுசுறுப்பாக செயல்பட மாட்டோம் ஒரு ஐந்து நிமிடம் ஆவது நமக்கு நேரம் எடுக்கும் சுயநினைவிற்கு வருவதற்கு அந்த சுய நினைவிற்கு வருவதற்கு முன்பாக நாம் நினைக்கும் நினைப்பானது நம்முடைய ஆழ் மனதில் பதிய ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தான் இந்த பரிகாரத்தையும் நாம் செய்யப்போகிறோம்.
தெற்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு எவ்வளவு நகைகள் அடமானத்தில் இருந்தாலும் சிவபெருமானை மனக்கண்ணில் கொண்டு வந்து அந்த நகைகளையும் மனக்கண்ணிற்கு கொண்டு வர வேண்டும். மறுபடியும் சிவபெருமானை நினைக்க வேண்டும், அடமானத்தில் இருக்கும் நகையை நினைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 32 முறை நாம் சிவபெருமானையும் அடமானத்தில் இருக்கும் நகையையும் நினைக்க வேண்டும். அவ்வளவுதான் பரிகாரம்.
தெற்கு முகமாக பார்த்து அமர வேண்டும் என்பதற்கு காரணம் கடனுக்கு உரியவராக திகழக்கூடிய செவ்வாய் பகவான் தெற்கு பார்த்தவாறு இருப்பார் என்பதால் தான். இப்படி தொடர்ச்சியாக நாம் இந்த பரிகாரத்தை கண் விழித்ததும் செய்து வர விரைவிலேயே அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகள் அனைத்தும் நம் கை வந்து சேரும் அளவிற்கு பணவரவு ஏற்படும்.
இதையும் படிக்கலாமே செல்வ வளம் உயர வளர்பிறை சதுர்த்தி வழிபாடு
எந்தவித செலவும் இல்லாமல் எந்தவித வழிமுறைகளும் இல்லாமல் செய்யக்கூடிய இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை முழு மனதுடன் செய்து அடமானத்தில் இருக்கும் நகைகளை திரும்ப முடியும்.