சாப்பிட சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த சுவையான போண்டாவை இன்றே நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்

bonda
- Advertisement -

குழந்தைகள் வீட்டில் இருந்தால் விளையாடி முடித்த களைப்புடன் அவர்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்து விடும். எனவே வீட்டில் இருக்கும் தின்பண்டங்களை சாப்பிட நினைப்பார்கள். அவை தீர்ந்து விட்டது என்றால் சற்று சுடச்சுட சுவையாக வேறு ஏதாவது செய்து கொடுக்கச் சொல்லி தங்கள் அம்மாவை தொல்லை செய்வார்கள். இது போன்ற நேரங்களில் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக செய்து கொடுக்க முடியும். கடையில் வாங்கி கொடுக்கும் எண்ணெய் பலகாரங்களை விட வீட்டில் அவற்றை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் சுட சுட சாப்பிடும் பொழுது சற்று அதிகமாகவும் சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான போண்டா ரெசிபியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப், கடலைப்பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 3, பூண்டு – 6 பல், இஞ்சி சிறிய துண்டு – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் பச்சரிசி, கால் கப் கடலைப்பருப்பு, கால் கப் பாசிப்பருப்பு, கால் கப் உளுத்தம் பருப்பு இவை அனைத்தையும் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

adai-dosai-things

பின்னர் இவற்றில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் 3 பச்சை மிளகாய், 6 பல் பூண்டு, இரண்டு துண்டு இஞ்சி சேர்க்க வேண்டும். பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவு பதம் இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

bonda3

பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு குழிக் கரண்டியில் பயன்படுத்தி ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒருமுறை மாவு ஊற்றியதும் அவை மேலே எழும்பும், அதன் பிறகு மற்றொரு கரண்டி மாவை ஊற்ற வேண்டும். இவ்வாறு அனைத்து மாரவிலும் போண்டா செய்து முடிக்க வேண்டும். இந்த போண்டாவுடன் வெங்காய சட்னி, புதினா சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -