அடமானத்தில் இருக்கும் தங்க நகையை மீட்டெடுக்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு

swarna-bairava
- Advertisement -

கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியானது வரவேற்கின்றது. அதாவது நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி. ஆங்கில தேதியில் டிசம்பர் 5 2023 அன்று தேய்பிறை அஷ்டமி. நிறைய நகை அடமானத்தில் உள்ளது. அதை மீட்டெடுக்க வழி இல்லை. என்னுடைய பெண் குழந்தைக்கு திருமணம் நடக்க வேண்டும். நிறைய தங்கம் வாங்க வேண்டும்.

இப்போது தங்கம் விற்க்கும் விலைக்கு தங்கம் வாங்குவதா, என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். வேறு வழி கிடையாது. பிள்ளைகளுக்கு திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் என்றால் கட்டாயம் தங்கம் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை நமக்கு நிலவி வருகிறது.

- Advertisement -

இருக்கின்ற நகையை அடமானத்தில் இருந்து மீட்டு எடுத்து பாதுகாக்கவும், மேலும் புதிய தங்க நகைகள் வாங்கி சேர்க்க வேண்டும் என்றாலும், நாளைய தினம் ஸ்வர்ணாக்கர்சன பைரவரை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அடகு நகைகளை மீட்டெடுக்க பரிகாரம்

அதிலும் இந்த கார்த்திகை மாதம் வந்திருக்கக்கூடிய இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தை மகா தேபிரை அஷ்டமி தினம் என்று சொல்கிறார்கள். விசேஷமான இந்த நாளை நாம் தவறவிடக்கூடாது. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் சுவர்ணாக்காஷன பைரவர் சன்னிதி இருக்கும் கோவிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நிறைய சிவன் கோவில்களில் காலபைரவர் இருப்பார். ஆனால் ஒரு சில கோவில்களில் மட்டும் தான் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இருப்பார். நாளைய தினம் கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த கோவிலை தேடி கண்டுபிடிங்க. இந்த கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.

முதலாவதாக சொல்லப்பட்டுள்ள விளக்கு பூசணிக்காய் விளக்கு. ஒரு பூசணிக்காயை இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் முழுமையான விதைகளையும் நீக்கி இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி ஸ்வர்ணாகர்சன பைரவர் முன்பு வைத்து இந்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து, அடமானம் வைத்த தங்க நகைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

- Advertisement -

தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று உங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதை மனமுருகி ஸ்வர்ணாகர்ஷன பைரவரிடம் சொல்லி, வரங்களை கேளுங்கள். நிச்சயம் உங்களுடைய கஷ்டம் அடுத்த தேய்பிறை அஷ்டமிக்குள் தீருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இந்த பூசணிக்காய் விளக்கு ஏற்ற முடியாதவர்கள் தேங்காயை இரண்டாக உடைத்து விளக்கு ஏற்றலாம்.

அதுவும் முடியாது என்பவர்கள் இரண்டு மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ விட்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மனம் உருகி நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்தாலும் உங்கள் வேண்டுதல் பணிக்கும். நாளைய தினம் இந்த வழிபாட்டை தவறாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் அபிராமி அந்தாதியின் பாடல் வரிகள்

நிச்சயம் உங்கள் வீட்டில் தங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய அந்த ஸ்வர்ணாகர்ஷன பைரவர் நிச்சயம் ஒரு வழியை காட்டிக் கொடுப்பார். மேல் சொன்ன ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவும்.

- Advertisement -