கடன் தீர்க்கும் அபிராமி அந்தாதியின் பாடல் வரிகள்

abirami
- Advertisement -

இந்த கலியுகத்தில் மட்டும் கடன் பிரச்சனையால் மனிதர்கள் வாடி வதையவில்லை. அந்த காலத்திலும் முனிவர்கள், ஞானிகள், சில குருமார்கள் வறுமையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார்கள். தங்களுடைய குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் போது என்ன செய்வது என்பது அறியாமல் அவர்களும் வாழ்வதா சாவதா என்ற நிலையில் நின்ற காலமெல்லாம் உள்ளது.

அவ்வளவு கஷ்டம் கொண்டவர்களை கூட, அந்த கஷ்டத்திலிருந்து மீட்டெடுத்து வந்து இறையடியில் சேர்ப்பதற்காக பட்டர் பெருமான் பாடி வைத்த பாடல் தான் இது. நமக்கு இருக்கும் வறுமை கடன் சுமையெல்லாம் நீங்கி நாமும் அந்த இறைவனின் பாதங்களைச் சரணடைய வேண்டும் என்றால் பின் சொல்லக்கூடிய இந்த பாடல் வரிகளை மனமுருகி தினமும் படித்து வர வேண்டும். நமக்கும் இறைவனின் பாதங்களில் இடம் கிடைக்க இந்த பாடல் நிச்சயம் ஒரு வழியை காட்டிக் கொடுக்கும்.

- Advertisement -

கடன் தீர அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

பொருள்

பொன் பொருள் காசு பணம் இவை இல்லாத காரணத்தினால், அடுத்தவரிடம் சென்று தலை குனிந்து, இழிவுபட்டு, நிற்காமல் இருக்க, அந்த அபிராமி தாயை நித்தம் நம்முடைய நெஞ்சில் நினைத்துக் கொண்டு, அதாவது தினம் தினம் அன்னையை நினைத்து தவமிருந்து, வணங்கினால், கல்லாத மனிதர்கள், கற்ற கயவர்களிடம் கையேந்தும் நிலை ஒரு காலத்திலும் வராமல் இருக்க வேண்டும் என்றும், இப்படிப்பட்ட உலகத்தில் வாழ்ந்து சிக்கி சின்னா பின்னம் ஆவதற்கு பதிலாக, மூன்று காலமும் அறிந்த தாயே, உன் பாதங்களில் எனக்கு ஒரு இடம் கொடு தாயே, என்று அபிராமி தாயை வேண்டி வணங்கி இந்த பாடலை நாம் பாடுகின்றோம்.

- Advertisement -

அந்த காலத்தில் புலவர்கள் எல்லாம் பெரிய அளவில் பணம் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பம் குழந்தைகள் பிள்ளை குட்டிகளும் சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்கு பொன் பொருள் தேவைப்பட்டது. அதனால் புலவர்கள் தங்களுடைய குடும்பத்தை விட்டு வெகு தூரம் சென்று பெரிய பெரிய மன்னர்கள் செல்வந்தர்கள் இவர்களை எல்லாம் புகழ்ந்து பாடி காசு பணம் வேண்டும் என்பதற்காக கையேந்தி நிற்பார்களாம்.

நல்லவர்களை பற்றி புகழ்ந்து பாடுவதில் தவறு கிடையாது. ஆனால் பணம் வேண்டும் என்பதற்காக தகுதியற்றவனையெல்லாம் புகழ்ந்து பாடி, சம்பாதிக்கும் காசு இருக்குது பாருங்க. அது ரொம்ப ரொம்ப கொடுமையானது. அந்த காலத்தில் வாழ்ந்த மேன்மையான புலவர்களும் இப்படி இழிவான செயலை செய்து, தகுதி இல்லாத மன்னர்களைக் கூட புகழ்ந்து பாடி செல்வம் வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஒரு பிழைப்பை பிழைத்துள்ளார்கள், இதை நினைத்து வருந்தி இப்படிப்பட்ட வாழ்வு வாழ்வதற்கு பேசாமல், வாழாமலே போய் விடலாம் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட புலவர்களும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படிப்பட்டவர்களுடைய நிலைமையை எண்ணி தான் பட்டர் பெருமான் இந்த பாடலை பாடி வைத்துள்ளார். இப்படியெல்லாம் வாழ்வதற்கு பேசாமல் நாம் அந்த அபிராமி தாயின் பாதங்களைச் சரண் அடைவது எவ்வளவோ உத்தமல்லவா. இந்த காலத்திலும் நம்முடைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. வேலை வேண்டும், காசு பணம் வேண்டும், செல்வம் வேண்டும், என்பதற்காக இல்லாதவர்கள் இருப்பவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். இந்த கதி எனக்கு வேண்டாம்.

இந்த கஷ்டம் எனக்கு வேண்டாம். பணத்தை தாண்டி, இருக்கக்கூடிய அந்த இறைவனின் பாதங்களைச் சரணடைய கூடிய வாழ்க்கையை எனக்கு கொடு என்று இந்தப் பாடலை நாம் தினம் தினம் பாடி வரும்போது நமக்கு இருக்கும் பண பிரச்சனைகள் எல்லாம் சரியாகி இறைவனின் பாதங்களில் ஒரு இடம் கிடைக்கும் என்பதுதான் இந்த பாடலில் மறைந்திருக்கும் அர்த்தம்.

நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த கலியுகத்தில் வாழ்வதற்கு பணம் மட்டும்தான் முக்கியம் என்று. அதனால்தான் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது. பணத்தையும் தாண்டி ஒரு சில விஷயங்கள் இருக்கின்றது. அவை தான் நமக்கு நிரந்தர நிம்மதியை கொடுக்கும் என்பதை இப்படிப்பட்ட பாடல்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இதையும் படிக்கலாமே: கலியுகத்தில் கஷ்டங்கள் தீர இதை செய்தாலே போதும்

உங்களுக்கும் பண பிரச்சினை இருக்கிறது எனும் போது அந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்வைப் பெற அபிராமி அந்தாதியில் இருக்கும் இந்த பாடலை படிங்க. நிச்சயம் உங்களுக்கும் நல்லது நடக்கும்.

- Advertisement -