அடமானம் வைத்த நகை கடனில் மூழ்காமல் இருக்க, இந்த ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும்.

jwelle
- Advertisement -

இன்று நம்மில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இரண்டு. கஷ்டத்திற்காக ஏதோ ஒரு அவசர தேவைக்கு நகையை அடமானம் வைத்து விட்டோம். வட்டியை மட்டும் தான் கட்ட முடிகிறது. ஆனால், நகையை மீட்பதற்கு வாய்ப்பே வரவில்லை. பணம் காசு கைக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும், அந்த காசை வைத்து அடமானம் வைத்த நகையை மட்டும் மீட்க முடியவில்லை. இப்படிப்பட்ட பிரச்சனையை சந்திப்பவர்கள் ஒரு பக்கமிருக்க, நகையை எந்த கிழமையில் அடமானம் வைத்தால் அதனை உடனே மீட்டெடுப்பது என்ற சந்தேகமும் சில பேருக்கு இருந்து வருகிறது. ஆக இரண்டு கேள்விகளுக்கான பதிலை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

gold

நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை மீட்டெடுக்க என்ன வழி? நகையை எந்த கிழமையில் அடமானம் வைத்தால் சீக்கிரத்தில் மீட்டெடுக்கலாம்? இந்த கேள்விகளுக்கான பதிலை நீங்களும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால் இந்த பதிவினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் நகையை அடகு வைப்பதற்கு முன்பு அந்த நகையை கொண்டு போய் பூஜை அறையில் வைத்து விட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். ‘என் கஷ்டத்திற்க்காக என் வீட்டு மகாலட்சுமியான தங்கத்தை கொண்டு போய் அடகு வைக்கின்றேன். கூடிய சீக்கிரமே இந்த நகைக்கான வட்டியையும் அசலையும் கொடுத்து மீட்டு எடுத்து விட வேண்டும்’ என்ற வேண்டுதலை வைத்துவிட்டு அதன் பின்பு அந்த நகையை கொண்டுபோய் அடமானத்தில் வைக்க வேண்டும்.

thangam

நகையை புதன்கிழமைகளில் அடமானம் வைத்தால் அந்த நகையை சீக்கிரமே மீட்டெடுக்க வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும். புதன்கிழமை தான் நகையை அடமானம் வைக்க ஏற்ற நாளாக சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு நாள் வியாழக் கிழமையிலும் நகையை அடமானம் வைத்துக் கொள்ளலாம். முடிந்தவரை புதன் கிழமையில் நகையை அடமானம் வைக்க பாருங்கள். சூழ்நிலை சரியில்லாத சமயத்தில் வியாழக்கிழமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

சரி, நகையை அடமானம் வைக்கும்போது நாள் கிழமை எல்லாம் பார்க்கவில்லை. ஏதோ ஒரு கிழமையில் நகையை அடமானம் வைத்து விட்டோம். இப்போது மீட்பதில் சிரமம் உள்ளது. வைத்த நகையை சீக்கிரமே அடமானத்தில் இருந்து மீட்க வேண்டும் என்றால் என்ன செய்வது. மாதம் மாதம் நகைக்கு கட்ட வேண்டிய வட்டித் தொகையை புதன்கிழமைகளில் கட்டி வரவேண்டும். புதன்கிழமைகளில் வட்டி பணத்தை கட்டிக் கொண்டே வரவேண்டும் நகையை சீக்கிரமே மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கனும். வைத்த நகையை சீக்கிரமே மீட்டெடுத்து விடுவோம்.

wednesday

குறிப்பாக எந்த கிழமையில் நீங்கள் நகையை அடமானம் வைத்திருந்தாலும், புதன்கிழமையிலேயே நகையை அடமானம் வைத்தாலும், நம்முடைய மனதில் எழக்கூடிய எண்ணங்கள் அந்த நகையை மீட்டெடுப்பதில் குறிக்கோளாக இருக்கவேண்டும். ‘இந்த நகையை அடகு வைத்து விட்டோம், முடிந்தால் மீட்டு எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் மூழ்கி போனால் போகட்டும். என்ன செய்வது.’ என்ற எண்ணத்தை மட்டும் நம்முடைய மனதில் விதைக்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் நம் வீட்டு மகாலட்சுமி நம் வீட்டிற்கு கொண்டு வர வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து வரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டால் நிச்சயம் அடமானம் வைத்த நகைகளை மீட்டு எடுக்கக்கூடிய வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -