இந்தச் சின்ன சின்ன குறிப்புகளை சரியாக செய்து வந்தாலே போதும். அதிர்ஷ்ட தேவி உங்கள் வீட்டு கதவை தட்டி உள்ளே வந்து விடுவாள்

varavu-selavu-lakshmi
- Advertisement -

தமிழர் மரபுப்படி ஊர் பொதுவாக செய்யப்படும் கோவில் திருவிழா முதல், தனித்தனியாக ஒவ்வொருவரது வீட்டிலும் இறைவனுக்கு செய்யக்கூடிய பூஜை முதல் அதற்கென்று பல கோட்பாடுகளையும், வரைமுறைகளையும் பல காலங்களாக பின்பற்றி வருகின்றோம். இவற்றில் பின்பற்றப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கு பின்னாலும் பல அர்த்தங்கள் புதைந்திருக்கின்றன. அவ்வாறு பெரியவர்களின் கூற்றுப்படி நமது வீட்டில் சில விஷயங்களை கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். அப்படி ஒரு சில வீட்டில் உள்ள பெரியவர்கள் வெறும் உரலை ஆட்ட கூடாது, வாசல்படியில் நிற்கக்கூடாது, உட்காரக்கூடாது, இறந்தவர் படத்தை இந்த திசையில் மாட்டக்கூடாது என்பார்கள். இப்படி ஒருசில செயல்களை செய்தால் அது நமது வீட்டிற்கு தேவை இல்லாத எதிர்மறை சக்திகளை கொண்டு வந்துவிடும். எனவே வீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்க சில ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி வரவேண்டும். வாருங்கள் அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

yaanai gopuram

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமாக தேவைப்படும் ஒரு விஷயம் பணம். ஒருவருடைய வீட்டில் செல்வங்கள் நிறைந்திருக்க மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். எனவே வீட்டிற்குள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் படுகின்ற வகையில் வீட்டின் வரவேற்பு அறையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தேவியார் செல்வ செழிப்புடன் ஒன்றாக இருக்கும் படத்தை மாட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் நிறைந்து காணப்படும்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு பெரிய உருளியில் தண்ணீர் நிறைத்துக் கொண்டு, அதில் பச்சை கற்பூரம், இரண்டு ஏலக்காய் மற்றும் வாசனை நிறைந்த மலர்களால் அலங்காரம் செய்து, அதன் நடுவே சிறிதளவு துளசி இலையை வைத்து விட வேண்டும். இதனை பெருமாள் படத்திற்குக் கீழே வைக்க வேண்டும்.

uruli2

ஒவ்வொரு வீட்டின் அடித்தளமாக அமைவது அந்த வீட்டின் நுழை வாசல் படியாகும். இதனை எப்பொழுதும் மங்களகரமாக வைத்திருக்க வேண்டும். நிலைவாசற்படியில் வைக்கப்படும் மஞ்சள் குங்குமம் கலைந்து இருக்கக் கூடாது. வாரம் தோறும் தவறாமல் புதியதாக மஞ்சள் குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். இதனால் லட்சுமி தேவி எளிதாக நமது வீட்டிற்குள் வந்து விடுவார்.

நிலை வாசற் படியில் மாவிலைத் தோரணம் அல்லது வேப்பிலை தோரணம் கட்டி இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக இவற்றை கட்டுவதற்காக நிலை வாசற் படியில் ஆணி அடிப்பது என்பது செய்யக் கூடாத ஒரு விஷயமாகும். வாசற்படியில் மேல்புறம் உள்ள சுவற்றில் ஆணி அடித்து இந்த தோரணங்களை மாட்ட வேண்டும். அப்படி நிலை வாசற்படியில் ஆணி அடித்திருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, அந்த ஓட்டையை மஞ்சள் வைத்து அடைத்துவிட வேண்டும்.

அடுத்ததாக தினமும் காலை அல்லது மாலை வேளை தவறாமல் தீபமேற்றி, சாம்பிராணி வத்திகளையும் ஏற்றி வைத்து, வீட்டை எப்பொழுதும் வாசனையாகவும், மங்களகரமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே முடிந்தவரை இவற்றை பின்பற்றி வந்தாலே போதும். அதிர்ஷ்டம் நமது வீட்டின் கதவை தட்டும்.

- Advertisement -