இந்தச் செடி உங்களுடைய வீட்டில் செழிப்பாக வளர வளர, உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து, பதவி, செல்வ செழிப்பும் வளர்ந்து கொண்டே செல்லும். அந்த அதிர்ஷ்ட செடியை பற்றி நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

lakshmi
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அந்தஸ்தாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும், செல்வச்செழிப்பில் உயர்வு ஏற்படுவதாக இருந்தாலும் சரி, படிப்படியாக நிலையாக முன்னேறினால் தான் அது நம்மிடத்தில் நிலைத்து நிற்கும். எந்த அளவிற்கு ஒரு மனிதன் வேகமாக தன்னுடைய வாழ்க்கையின் முன்னேறுகின்றானோ, ஏதோ ஒரு கட்டத்தில் அதே வேகத்தோடு வாழ்க்கையின் அடி மட்டத்திற்கு சென்றுவிடுவான். இது நல்ல அனுபவசாலிகளுக்கு தெரியும். இதேபோல் தான் மண்ணில் வேரூன்றி மெதுவாக தன்னுடைய வளர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய ஒரு செடியை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ginjer

இந்த செடியானது எப்படி வேரூன்றி வளர்வதற்கு அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்கின்றதோ, அதேபோல் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றம் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும், அதில் நீங்கள் நிலையான வெற்றியை காண, இந்த செடி உங்களுக்கு துணையாக நிற்கும். அது என்ன செடி? எல்லோர் வீட்டு சமையலிலும், பயன்படுத்தக்கூடிய இஞ்சி! இந்த இஞ்சி செடியை ஒருவருடைய வீட்டில் தொட்டியில் வைத்து வளர்த்து வந்தாலும் கூட, அந்த வீட்டில் முன்னேற்றம் சீராக படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லும்.

- Advertisement -

அதாவது இஞ்சி செடி மற்ற செடிகளைப் போன்று கடகடவென வளரக்கூடியது அல்ல. நிதானமாக எட்டு மாதங்களுக்கு மேல் வளர்ந்த பின்புதான், அதன் மூலம் நம்மால் பயனை அடைய முடியும். அதேபோல் சிறிய துண்டு இஞ்சியை விதைத்தால், அதிலிருந்து நிறைய இஞ்சிகளை அறுவடை செய்யலாம். சிறிய அளவில் நீங்கள் முதலீடு செய்தாலும் அதில் இருந்து பெரிய அளவு லாபத்தை பெறலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

Ginger - Inji

அப்போ இஞ்சியை விதைத்து, விவசாயம் செய்யும் விவசாயிகள் எல்லாம் ஏன் கோடீஸ்வரர்கள் ஆகவில்லை என்ற விதண்டாவாத கேள்வியை கேட்பவர்களுக்கு நிச்சயமாக இந்த இடத்தில் பதில் கிடையாது. நம்பிக்கையுடன் இந்த செடியை எவர் வீட்டில் முன் பக்கத்தில் வைத்து வளர்த்து வருகின்றாராரோ, அவர்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு, பதவி, வருமானம், இப்படி எல்லா வகையான சகல சௌபாக்கியமும், படிப்படியாக உயர்வுக்கு செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் இஞ்சி நன்றாக காய்ந்த பிறகு, கிடைப்பதுதான் சுக்கு. அந்த சுக்கை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் சுக்குத்தூள் கடைகளிலிருந்து கிடைக்கின்றது. தினமும் உங்களுடைய வீட்டை கூட்டி சுத்தம் செய்து விட்டு ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் ஒரு சிட்டிகை சுக்குத் தூளைப் போட்டு மூலைமுடுக்குகளில் எல்லாம் தெளித்து வந்தால் வீட்டில் காரிய தடை என்பது இருக்காது. முன்னேற்றத்தை தடை படுத்தக்கூடிய எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை அடித்து நொறுக்க கூடிய சக்தி இந்த இஞ்சிக்கும், சுக்கு பொடிக்கும் உண்டு.

cash

உங்களால் சுக்குப் பொடியை வாங்க முடியவில்லை என்றால் இஞ்சியை பொடியாக நறுக்கி விட்டு முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலை உங்களது வீட்டை சுத்தப்படுத்தி விட்டு அந்த தண்ணீரை நில வாசல் படி வெளிப் பக்கத்திலும் வீட்டின் உள் பக்கத்தில் இருக்கக்கூடிய மூலை முடுக்குகளிலும் தெளித்து விட்டால் கூட போதும். வாழ்க்கையில் நம்பமுடியாத நல்ல முன்னேற்றங்களை படிப்படியாக காண முடியும். இன்றளவிலும் வடமாநிலத்தவர்கள் இப்படிப்பட்ட பரிகாரங்களை பின்பற்றி வருகிறார்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டிலேயே இஞ்சி வளர்க்கணும்னு ஆசை உங்களுக்கு இருக்கா? அப்படின்னா 5 நிமிஷம் இத படிச்சு பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -