கார்த்திகை மாதம் அதிர்ஷ்டம் தரக்கூடிய இந்த ஹோமத்தை செய்து வந்தால் வாழ்க்கைத்தரம் உயர்ந்து பொன் பொருள் சேரும்

homam
- Advertisement -

ஒரு சில மாதங்கள் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கும் அப்படி புரட்டாசி மாதம் பெருமாளுக்கும், ஆடி மாதம் அம்பாளுக்கும் என பல பூஜைகள் செய்யப்படும் மாதமாக இருக்கின்றன. ஆனால் இந்த கார்த்திகை மாதம் மட்டும் தான் பலதரப்பட்ட கடவுள்களுக்கும் விசேஷமானதாக அமைகிறது. இந்த மாதம் கந்தனுக்கு உரிய மாதமாக தான் பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மட்டும் காரணமல்ல. இதைத் தவிர பல தெய்வங்களும் இந்த மாதத்தில் சிறப்புமிக்க செயல்களை செய்கின்றனர். எனவே இந்த மாதம் மிகவும் ஒளிமயமான மாதமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் அனைவரது வீட்டிலும் தீபங்கள் ஏற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இப்படி இந்த மாதத்தில் இந்த விசேஷ ஹோமம் செய்வதன் மூலம் கிடைக்கப் போகும் பலன்கள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sivan

மிகவும் முக்கியமாக இந்த மாதம் சிவபெருமானை பூஜிக்க சிறந்ததாகவும் இருக்கிறது. இந்த மாதத்தில்தான் சிவபெருமான் திருபுராசுரன் என்ற அசுரனை வதம் செய்திருக்கிறார். அந்த நாளையே கார்த்திகை தீபமாக கொண்டாடுகிறோம். அதுமட்டுமல்லாமல் விஷ்ணு பகவான் தனது உறக்கத்தை கலைக்கும் மாதமும் கார்த்திகை மாதமாகும். அத்துடன் நரசிம்மரும் தனது மூன்றாவது கண்ணை திறக்கும் ஒரு மாதம் கார்த்திகை மாதமாகும். ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மாலை போடும் மாதமும் இந்த மாதத்தில்தான் துவங்குகிறது.

- Advertisement -

இத்தனை சிறப்பு மிக்க கார்த்திகை மாதம் அக்னியை போற்றும் மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் எந்த அளவிற்கு அக்னியை வணங்குகிறோமோ அந்த அளவிற்கு நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டே இருக்கும். வீட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்வு அமைந்திடும். பொன், பொருள் அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

temple

இந்த மாதத்தில் விரதம் இருந்து தினமும் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. அதிலும் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் பெரும் பலனை அடைய முடியும். அவ்வாறு அசைவம், வெங்காயம், பூண்டு, கொண்டைக்கடலை, பாகற்காய், வெண்பூசணி போன்றவற்றை இந்த மாதத்தில் உணவில் சேர்ப்பதை தவிர்த்து வந்தால் நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

தினமும் காலை அல்லது மாலை வேளை நான்கு செங்கல் அல்லது சிறிய ஓமகுண்டம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு வரட்டியை எடுத்து சிறியதாக உடைத்து கொண்டு ஹோம குண்டத்தில் அல்லது செங்கல்களுக்கு நடுவில் சிறிதளவு மண் கொட்டி அதன் நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய கற்பூரத்தை அதன் மீது வைத்து ஏற்றிவிட வேண்டும்.

homam

பின்னர் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் நெய் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக அக்னிகுண்டத்தில் சேர்த்து “ஓம் அகினியாய நமக” என்று மூன்று முறை சொல்ல வேண்டும். அடுத்ததாக பத்திலிருந்து பதினைந்து நிமிடம் ஒவ்வொரு முறையும் சிறிதளவு நெய் விட்டு “ஓம் ருத்ராய நமக” என்று மனமுருகி சொல்லிக்கொண்டு சிவபெருமானை பூஜிக்க வேண்டும். இவற்றை கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் தொடர்ந்து செய்யலாம் அல்லது வாரம் ஒரு முறையும் செய்யலாம். இப்படி அக்னியை போற்றி பூஜை செய்வதன் மூலம் நமது வாழ்வில் சிறந்த பலனை அடைந்து பேரதிர்ஷ்டம் பெற முடியும்.

- Advertisement -