இந்த ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி எவருமில்லை. இதைப் பற்றித் தெரிந்து கொண்டால் இனி அனைவரும் இந்த செடியை உங்கள் வீட்டில் உடனே வைத்து விடுவீர்கள்

nithya-kalyani-lakshmi
- Advertisement -

அனைவரும் தங்களது இல்லங்களில் பலவிதமான செடி மற்றும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அதிலும் இடைப்பட்ட காலத்தில் இப்படி செடி மற்றும் மரங்கள் வளர்ப்பது அனைவருக்கும் மிகவும் விருப்பமான விஷயமாக மாறிவிட்டது. இவ்வாறு வீட்டில் வளர்க்கப்படும் செடிகள் வீட்டிற்க்குள் வளர்க்கலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனை பெற்று வளர்க்க வேண்டும். சில செடி மற்றும் மரங்களை வீட்டிற்குள் வளர்ப்பது நல்ல சகுணத்தை கொடுக்காது. எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும். அவ்வாறு வீட்டிற்குள் வைக்கவேண்டிய செடிகளை மட்டுமே வளர்க்க வேண்டும். இப்படி ஒரு சில இடங்களில் தானாக வளரக்கூடிய ஒரு செடி நமது வீட்டிற்கு பலவித நன்மைகளை கொடுக்கிறது .அதனை பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும். இதற்காக தனியாக விதை போட்டு, செடியை வளர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு செடி வைத்தால் போதும் அதனை தொடர்ந்து அடுத்து அடுத்து என பல செடிகள் வளர்ந்து விடும். வாருங்கள் அது என்ன செடி? அதன் பலன்கள் என்னென்ன? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

செடி வளர்ப்பதற்கு இடம் இல்லாதவர்கள் கூட ஒரு சிறிய தொட்டியில் இதனை வளர்க்க முடியும். அப்படி அனைத்திற்கும் நன்மை கொடுக்கக்கூடிய அந்த செடி நித்தியகல்யாணி செடி ஆகும். இந்த செடியை பலரும் வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். இதற்கு காரணம் ஏனென்றால் இது அதிகமாக வளரக்கூடிய இடம் சுடுகாடு தான்.

- Advertisement -

சில காலங்களுக்கு முன்னர் இறந்தவர்களை மண்ணிற்குள் புதைத்து விட்டு அதற்கு மேல் இந்த நித்தியகல்யாணி செடியை நட்டு வைப்பது பலரின் வழக்கமாக இருந்தது. இதற்கு காரணம் இந்த நித்தியகல்யாணி செடியின் மருத்துவ குணத்தை பற்றி தெரிந்திருந்தால் இவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்ந்து இருப்பார்கள் என்பதை குறிப்பதற்காகவே. இவ்வாறுதான் நித்யா கல்யாணி சுடுகாட்டில் அதிகமாக வளர ஆரம்பித்தது.

அதிலும் சாம்பல் தன்மை அதிகமாக இருக்கும் இடத்தில் இந்தச் செடி விரைவாக வளர்ந்து விடும். இந்த செடி ஆக்ஸிஜனை அதிகளவு வெளிப்படுத்துகிறது. எனவே சுவாச பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் இந்த செடி இருந்தால் அந்த இடத்தில் இவ்வாறு பிரச்சனைகள் இருக்காது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டீ வைத்து குடிக்கலாம்.

- Advertisement -

இவ்வாறு நமது மருத்துவமுறைகளில் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது இந்த நித்தியகல்யாணி செடி. அதுபோல இந்த செடி லட்சுமி தேவியின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல பூக்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நித்தியகல்யாணி தெய்வத்தின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய அருள் நிறைந்த இந்த செடி மட்டும் நமது வீட்டில் இருந்தால் நமக்கு வேண்டிய வரங்கள் கிடைத்துவிடும்.

அதிலும் இந்த செடியின் வேர் பகுதியை எடுத்து நமது வீட்டிற்கு முன் வாசலில் மண்ணிற்கு அடியில் புதைத்து விட்டால் போதும். நமது வீட்டிற்கு வருபவர்கள் இதனை மிதித்து அதன் பிறகுதான் நமது வீட்டிற்குள் நுழைய வேண்டும். அப்படி அவர்கள் வரும் பொழுது அவர்களின் தீய எண்ணங்களும், தீய பார்வையும் நம்மை பாதிக்காமல் அந்த இடத்திலேயே அழிந்துவிடும்.

- Advertisement -