அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய இந்த 1 பொருள் உங்களிடம் இருந்தாலே போதும். அந்த அதிர்ஷ்டத்திற்க்கே, அதிர்ஷ்டத்தை கடனாக கொடுக்கலாம்.

cash1

காசு பணம் இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒருவருக்கு வாழ்க்கையில் கட்டாயம் தேவைப்படும் ஒரு விஷயம் தான் இந்த அதிர்ஷ்டம். அது இஷ்டத்திற்கு வருவதால் இதற்கு அதிர்ஷ்டம் என்று பெயர் வந்ததோ? சில பாடல் வரிகளில் கூட நாம் இதைக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். இந்த அதிர்ஷ்டத்தை ஆரவாரத்தோடு வரவேற்று, அதிர்ஷ்டத்தை, அது இஷ்டத்திற்கு வெளியே செல்லவிடாமல், நம்மிடமே வைத்துக் கொள்வது எப்படி? தாந்திரீக ரீதியாக சில பொருட்களை நம்முடனே வைத்துக் கொள்வதன் மூலமாக, அதிர்ஷ்டம் நம்முடனே ஐக்கியமாகி விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய அந்த பொருட்கள் என்னென்ன? அதை எப்படி வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்துகொள்வோமா?

annasipo

சில பேருக்கு நல்ல நேரம் ரயிலில் வருகிறது என்றால், கெட்ட நேரம் ஏரோபிளேன் பிடித்து வரும் என்று சொல்வார்கள். அதாவது நல்லது நடப்பதற்கு முன்பு, அதிவிரைவாக ஒரு கெட்டது வந்து நம்மை கஷ்டப்படுத்தி விடும். இவர்களைத்தான் அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள். நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் அந்த வேலைக்கான இன்டர்வியூவில் கூட நம்மால், சரியான நேரத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

ஒரே ஒரு எண்ணில் எதிர்பாராத விதமாக ஒரு கோடி ரூபாயை இழந்தவர்களின் கதை கூட உள்ளது. ஒரே ஒரு ரூபாயை கையில் வைத்துக் கொண்டு, கோடீஸ்வரர்கள் ஆன கதைகளும் இந்த பூலோகத்தில் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் அதிர்ஷ்டம்! அதிர்ஷ்டக் காற்று யார் பக்கம் வீசுகின்றதோ அந்தப் பக்கம் பண மழை கொட்ட தானே செய்யும்.

money-1

சரி, நம்முடைய துரதிர்ஷ்டத்தை நம்மிடம் இருந்து விரட்ட, நம் கையில் எந்த பொருளை வைத்துக் கொள்ளலாம். பிரியாணிக்கு பயன்படும் ‘அன்னாசிப் பூ’ என்று சொல்லக்கூடிய இந்த வாசனை மிகுந்த பொருளை எப்போதுமே நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு முன்னால் செல்லும் துரதிர்ஷ்டத்தை தடுத்து நிறுத்தி, உங்களுக்கான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் சக்தி இந்த அன்னாசிப் பூவிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. சொன்னா நிச்சயமா நீங்க நம்ப மாட்டீங்க! வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. லக் அடிச்சா லாபம் தானே. நஷ்டம் ஆவதற்கு அன்னாசிப் பூவின் விலை ஒன்றும் கோடி ரூபாய் இல்லை.

flute

அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில் புல்லாங்குழல் இருப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். மயில் இறகை புல்லாங்குழலுடன் சேர்த்து இணைத்து வைப்பது மேலும் பல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரவேற்பறையில் ஏதாவது ஒரு இடத்தில் உங்கள் கண்களுக்கு இந்த 2 பொருட்களும் படும்படி வைத்துக் கொண்டாலே போதும்.

happy

புல்லாங்குழலும் மயில் இருக்கும் இருக்கும் இடத்தில் எப்போதுமே நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். திடீரென நம்முடைய வீட்டில் மன கசப்பான சம்பவங்கள், சண்டை சச்சரவுகள் வந்தால் கூட, இந்த இரண்டு பொருட்களையும் கொஞ்ச நேரம் எடுத்து கையில் வைத்துக் கொண்டாலே மனது லேசாகி விடும். பிரச்சினைகள் சுலபமாக ஒரு முடிவுக்கு வருவதற்கான வழியும் நமக்கு கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள். அதிர்ஷ்டம் உங்களுடனே இருக்க இந்த மூன்று பொருட்களும் நிச்சயமாக உங்களுக்கு உதவி புரியும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.