நீங்கள் தூபம் காட்டும் பொடியில் இந்த மூலிகைகளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சற்றும் எதிர்பாராத அற்புதங்களை உங்களால் உணர முடியும்

thoobam
- Advertisement -

செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ நாட்களிலும் வீடுகளில் தூபம் காண்பிக்கப்படுகிறது. அவ்வாறு கோவில்களில் தினமும் தவறாமல் தூபம் காண்பிக்கப்படுகிறது. இவ்வாறு தூபம் காண்பிக்க படுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன? அவற்றில் சேர்க்கப்படும் பொருட்களின் மகிமை என்ன? எதற்காக இந்த தூபம் காண்பிக்கப்பட வேண்டும்? என்பதற்கான தெளிவான ஆன்மீக குறிப்புகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tuesday

சுத்தம் எங்கு இருக்கிறதோ அங்கு ஆரோக்கியம் நிலவும். அதுபோல எங்கெல்லாம் அசுத்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் நோய்தான் உண்டாகும். அவ்வாறு நல்லவை இருக்கின்ற இடத்தில் நல்லதும், கெட்டவை இருக்கின்ற இடத்தில் கெட்டதும் தான் சேரும். எனவே நல்ல நறுமணத்தை கொண்ட தூபத்தினை வீட்டில் காண்பிப்பதன் மூலம் விஷ ஜந்துக்கள் இந்த அற்புதமான வாசத்திற்கு வீட்டினை அண்டாமல் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

- Advertisement -

அவ்வாறு வீட்டில் இருக்கும் பெண்கள் காலை எழுந்து குளித்தவுடன், விளக்கு ஏற்றி, இறைவனை மனதார வணங்கி விட்டு, தூபம் காண்பிக்க வேண்டும். இவ்வாறு செய்து வருவதால் அந்த வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும். அள்ள அள்ள குறையாத செல்வம் தேடி வரும். அதிர்ஷ்டம் உண்டாகும் இந்த தூபத்தில் சேர்க்கப்படும் சில மூலிகை பொருட்களுக்கு சிறப்பு வாய்ந்த மகத்துவமான குணங்களும் இருக்கின்றன. அவ்வாறு அதில் சேர்க்கப்படும் பொருட்களின் தெய்வீக குணங்களும் நமது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை உண்டாக்குகின்றன.

dhubam

முதலாவதாக சந்தனத்தை பொடி செய்து அதனை தூப பொடியுடன் சேர்த்து தூபம் காண்பிக்கும் பொழுது வீடு தெய்வாம்சம் நிறைந்ததாக இருக்கும். அந்த இறைவனே நமது வீடு தேடி வந்து விடுவார். அவ்வாறு இறை சக்தியை கொடுக்க வல்லது இந்த சந்தன தூபம். அகில் என்பது ஒரு தாவர வகையாகும். இந்த தாவரத்தின் இலையையோ அல்லது மரத்தின் பட்டையையோ காய வைத்து பொடி செய்து தூபம் காண்பிக்கும் பொழுது செல்வத்தில் எல்லாம் பெரிய செல்வம் குழந்தைச் செல்வம் கிடைக்கும் வரம் கிடைக்கிறது.

- Advertisement -

துகில் தூபம் காண்பிப்பதால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின் குறைபாடினாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளினாலும் உண்டாகும் நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. குழந்தைகளின் ஆயுளை அதிகரிக்கிறது. இவ்வாறு துளசி தூபம் காண்பிப்பதால் தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் நிறைவேறும். வீடு கட்டுவது, திருமண தடை போன்றவை நிவர்த்தியாகும். துளசி பெருமாளின் அம்சமாக பார்க்கப்படுகிறது.

sandhanam

தூதுவளை தூபம் காண்பித்ததால் குலதெய்வம் நமது வீடு தேடி வரும் என்பது ஐதீகமாகும். தூதுவளை இறைவனுக்கே தூது செல்லும் இலை என்று கூறப்படுகிறது. எனவே இந்த தூபத்தை வீடுகளில் காண்பிப்பதன் மூலம் இறை சக்தியை பெறமுடியும். அது மட்டுமல்லாமல் கடவுளின் சாபம், முன்னோர்களின் சாபம் எதுவாக இருந்தாலும் அவற்றில் இருந்தும் விடுபட முடியும்.

thoothuvalai

வெண் குங்கிலியம் கொண்டு தூபம் காண்பிக்கும் பொழுது கண்ணுக்கு தெரியாத துர்சக்திகள் மற்றும் எதிர்மறை சக்திகளை வீட்டில் இருந்து வெளியேற்றுகிறது. வெண்கடுகு கொண்டு தூபம் காண்பிக்கும்போது கணவன்-மனைவி இடையே இருக்கும் சண்டைகள் நீங்கி ஒற்றுமை பலப்படுகிறது. வீட்டில் இருக்கும் தீய சக்திகளை அகற்ற மருதாணி விதை கொண்டு தூபம் காண்பிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் மூதேவியை விரட்ட வேப்ப இலை பொடியை வைத்து தூபம் காண்பிக்க வேண்டும்.

- Advertisement -