இந்த வெயில் காலத்தில் கூட, உங்க வீட்ல மட்டும் இட்லி மாவு, தோசை மாவு 10 நாள் ஆனாலும் புளிக்காது. இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

idli-mavu
- Advertisement -

தேடினாலும் கிடைக்காத பயனுள்ள 5 வீட்டு குறிப்புகளை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புகள் எல்லாமே வீட்டுக்கு அடிப்படையாக தேவைப்படக்கூடிய முக்கியமான குறிப்புகள். இல்லத்தரசிகள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்புகளை எல்லாம் படித்து பாருங்கள். உங்களுக்கு எந்த குறிப்பு பிடித்திருக்கிறதோ, அதை உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக ஏதாவது ஒரு குறிப்பாவது அவசரத்துக்கு உதவாமல் இருக்காது. சிறு துரும்பும் பல் குத்த உதவும். அதுபோல இந்த சின்ன டிப்ஸ் கூட என்றைக்காவது உங்களுக்கு கைகொடுக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் பயனுள்ள அந்த வீட்டு குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

குறிப்பு 1:
ஃப்ரிட்ஜில் வைத்தால் கூட இந்த வெயில் காலத்தில் மாவு சீக்கிரம் புளித்து போகிறது. அரைத்து டப்பாவில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் அந்த மாவுக்கு, மேலே நறுக்கிய ஐந்தாறு தேங்காய் சில்லுகளை போட்டு வைத்தால், இட்லி மாவு எளிதில் புளிக்காது. புளிப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்கும். தேங்காயை சின்ன சின்ன பல்லாக வெட்டி மாவு மேலே போட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது ஒரு குறிப்பு, இரண்டாவதாக நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மாவில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையை ஊற்றி கலந்து வைத்தாலும் இட்லி மாவு எளிதில் புளிக்காது. நிறைய எண்ணெய்யை ஊற்றக்கூடாது. அரை லிட்டர் அளவு இட்லி மாவு இருக்குது என்றால் அதில், ஒரு சின்ன ஸ்பூன் விளக்கெண்ணையை கலந்தால் போதும்.

குறிப்பு 2:
புதினா இலைகளை கிள்ளிவிட்டு அதன் காம்புகளை தூக்கி குப்பையில் போடாதீங்க. அந்த காம்புகளை எல்லாம் மண் போக, தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஈர காட்டன் துணியில் புதினா காம்புகளை வைத்து சுருட்டி பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால், அது நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது. இரண்டு புதினா குச்சிகளை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி புதினா டீ போட்டு பாருங்கள். வாசனை சூப்பரா இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 3:
நீங்க அடிக்கடி பயன்படுத்தும் சேஃப்டி பின் மொக்கையாகி விடுகிறதா. தடிமனான துணி, பட்டுப் புடவைகளில் எல்லாம் அந்தப் பின்னை குத்த முடியவில்லையா. இப்படி இருந்தால் ஊக்கின் முனைப்பகுதியை ஒரு சோப்பில் குத்தி எடுங்கள். குளிக்கின்ற சோப் இருக்கும் அல்லவா, அந்த சோப்பில் இந்த ஊக்கின் ஃசார்பான பகுதியை இரண்டு முறை குத்தி எடுத்தால் போதும். மொக்கையாக இருக்கும் சேஃப்டி பின் கூட ஷார்ப்பாக மாறிவிடும். தடிமனான துணியில் கூட சுலபமாக ஊக்கு குத்திக் கொள்ளலாம்.

குறிப்பு 4:
தலைக்கு பயன்படுத்தும் சீப்பு ரொம்ப அழுக்காக இருக்கிறதா. அதன் மேலே கொஞ்சம் முகத்துக்கு போடுகின்ற பவுடரை தூவி விடுங்கள். பிறகு பல் தேய்க்கும் பிரஷ் வைத்து சீப்பில் இருக்கும் அழுக்கை எல்லாம் வெளியே நீக்கி எடுத்தால், சீப்பில் ஒரு துளி தண்ணீர் கூட போடாமல், சுத்தம் செய்து விடலாம். சீப்பில் இருக்கும் அழுக்கு பிசுபிசுப்பு மொத்தமும் நீங்கிவிடும். சீப்பு பல்லுக்கு மேலே பவுடரை தூவி விட்டு, பல் தேய்க்கும் பிரஷ்சை வைத்து சீப்பை சீவி விட போறீங்க அவ்வளவுதான்.

- Advertisement -

குறிப்பு 5:
கொஞ்சம் குறைந்த அளவில் மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு போட்டு அரைத்தால் சில சமயம் அது அரைபடாது. கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாலும் சரியாக அரைப்படாமல் தொல்லை கொடுக்கும். இஞ்சி பூண்டு மிக்சி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டிடுங்க. அதன் பிறகு அதில் கொஞ்சமாக கல் உப்பு போட்டு மீண்டும் அரைத்துப் பாருங்கள். இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் ஊற்றாமலே சூப்பராக விழுது போல மைய அரைபட்டு நமக்கு கிடைத்துவிடும். இந்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சமைக்கும்போது, நீங்கள் சமைக்கும் டிஷ்ஷில் உப்பை கொஞ்சம் ஜாக்கிரதையாக போட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதிலும் கொஞ்சம் உப்பு இருக்கிறது அல்லவா.

இதையும் படிக்கலாமே: இனி பூரிக்கு மாவு பிசையும் போது இப்படி பிசைஞ்சு வச்சிருங்க, ஒரு மாசம் ஆனா கூட மாவு கெட்டுப் போகாம நினைச்ச உடனே 100 பூரி சட்டுனு சுட்டு சாப்பிடலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது செம யூஸ் பூல்லா இருக்கும்.

மேலே சொன்ன இந்த சின்ன சின்ன பயனுள்ள ஐந்து வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெரலாம்.

- Advertisement -