இனி பூரிக்கு மாவு பிசையும் போது இப்படி பிசைஞ்சு வச்சிருங்க, ஒரு மாசம் ஆனா கூட மாவு கெட்டுப் போகாம நினைச்ச உடனே 100 பூரி சட்டுனு சுட்டு சாப்பிடலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது செம யூஸ் பூல்லா இருக்கும்.

poori
- Advertisement -

சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று தான். பெண்களை பொருத்த வரையில் சப்பாத்தி பூரி செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் தயங்கத் தான் செய்வார்கள். அதில் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். இனி அந்த கவலை இல்லாமல் மிகவும் சுலபமாக அதை நேரத்தில் சுலபமாக பூரியை செய்து அதிக நாட்கள் வைத்து அதை பயன்படுத்துவது எப்படி என்பதை எல்லாம் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதன் உள்புறம் சுற்றிலும் லேசாக எண்ணையை தடவிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு கால் டம்ளர் சுடு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது இதில் இரண்டு கப் கோதுமை மாவை சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் இரண்டு முறை சுற்றி எடுத்தால் போதும் மாதம் நன்றாக கலந்து வந்து விடும். உங்களுக்கு தண்ணீரை சரியான அளவில் சேர்க்க தெரியவில்லை என்றால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கூட மாவை அரைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது மிக்ஸியில் இருந்து கலந்த கோதுமை மாவை எடுத்து கொஞ்சம் எண்ணெய் தடவி லேசாக பிசைந்து ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள். இந்த மாவு 10 நிமிடம் வரை ஊறட்டும்.

பத்து நிமிடம் கழித்து ஊறிய மாவில் உங்களுக்கு தேவைக்கு சின்ன சின்னதாக பூரிக்கு உருண்டைகளை தயார் செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு அகலமான சில்வர் தட்டை எடுத்து அதன் மீது எண்ணெய் தடவி விடுங்கள். அதன் பிறகு அதே போல் இன்னொரு தட்டையும் எடுத்து அதன் பின்புறமும் எண்ணெயை தடவி விடுங்கள். இப்போது எண்ணெய் தடவிய ஒரு தட்டின் மீது நீங்கள் உருட்டி வைத்த சப்பாத்தி மாவை வைத்து இன்னொரு தட்டை மேலே வைத்து அழுத்தி விடுங்கள். நல்ல அழகான வட்ட வடிவில் பூரி தயாராகி விடும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல்லில் வைத்து சூடான பிறகு செய்து வைத்து பூரிகளை போட்டு எண்ணெய் ஊற்றாமல் பாதி அளவு வெந்த பிறகு எடுத்து விடுங்கள். இந்த பூரிகளை ஒரு காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து விட்டால் ஒரு மாதம் வரை கூட இது கெடாமல் அப்படியே இருக்கும்.

இப்படி போட்டு எடுத்த இந்த பூரிகளை தேவைப்படும் பொழுது கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடு படுத்திய பிறகு பொரித்து எடுத்துக் கொள்ளலாம். இப்படி மட்டும் தயார் செய்து வைத்து கொண்டால் இனி நீங்கள் பூரி சாப்பிட வேண்டும் என்றால் சுலபமாக மாவு அரைத்து சட்டுனு 100 பூரி கூட செய்யலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த முறை மிகவும் எளிதாக இருக்கும். இந்த டிப்ஸ் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கு.

- Advertisement -