அகல் விளக்கு ஏற்றுவதற்கு பின்னால் இருக்கும் தாத்பரியம் என்ன?

vilakku
- Advertisement -

கோவிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, மண் அகல் விளக்கில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்றுவது நமக்கு நன்மையை தரும் என்பது நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கும் சாஸ்திரம். இது நம்மில் பல பேருக்கு தெரியும். இதை தான் நாம் இன்றளவும் பின்பற்றி வருகின்றோம்.

ஆனால் இந்த விளக்கிற்கு பின்னால் மறைந்திருக்கும் ஆன்மீக ரகசியம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா. அதைப் பற்றித்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

அகல் விளக்கு ஏற்றுவதன் தாத்துப்பரியம்

1. நாம் ஏற்றக்கூடிய அகல் விளக்கானது சூரிய பகவானை குறிக்கின்றது. 2. அந்த அகல் விளக்கில் ஊற்றக்கூடிய நெய் எண்ணெய் எதுவாக இருந்தாலும் அது திரவியத்தன்மை கொண்டது. இது சந்திர பகவான். 3. அதில் போடக்கூடிய திரி புதன் பகவானாகும்.

4. அதில் ஏற்றக்கூடிய தீபச்சுடர் செவ்வாய் பகவானை குறிக்கின்றது. 5. நாம் ஏற்றக்கூடிய அகல் விளக்குக்கு கீழே இருக்கும் அந்த கருப்பு நிழல் தான் ராகு பகவான். 6. அந்த தீபச்சுடலில் லேசாக மஞ்சள் நிறம் தெரியும் அல்லவா அதுதான் குரு பகவான்.

- Advertisement -

7. அந்த தீபமானது எரிந்து முடிந்த பிறகு விளக்கு திரியில் ஒட்டி இருக்கும் கருப்பு நிறம் தான் சனிபகவான். 8. இந்த தீபச்சுடரின் வெளிச்சம் நம் வீடு முழுவதும் பரவி இருக்கிறதல்லவா. ஞான ஒளி, இதுதான் கேது பகவான். 9. இந்த விளக்கில் போடும் திரியானது எரிய எரிய சின்னதாகிக்கொண்டே வரும். அதாவது திரி குறைந்து கொண்டே வரும். இதுதான் சுக்கிர பகவான் (ஆசை).

இந்த ஆசைதான் வாழ்க்கையை அழிக்கிறது. ஆசையை எந்த அளவுக்கு குறைத்துக் கொள்கின்றோமோ. அந்த அளவுக்கு சுகமாக வாழலாம். இந்த ஆசை என்னும் மாயை தான் நம்மை மோட்சத்திற்கு செல்ல விடாமல் மீண்டும் மீண்டும் மனிதப் பிறவியை எடுத்து வைத்து கர்மாவை கழிக்க வைக்கிறது.

- Advertisement -

நவகிரகங்களும் ஒன்றாக இருக்கும் இந்த மண் அகல் விளக்கு ஏற்றுவதற்கு பின்னால் இருக்கும் தாத்பரியத்தை புரிந்து கொண்டு இனிமேல் தீபம் ஏற்றுங்கள். உங்களுடைய ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்வு வளம் பெறும். கூடிய சீக்கிரம் அந்த இறைவனின் பாதத்தில் மோட்சமும் கிட்டும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தேடி வர மாதங்கி வழிபாடு

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு, தங்கத்தாலேயே விளக்கு வைத்திருந்தாலும் சரி, ஒரு சின்ன தட்டின் மேல் மண் அகல் விளக்கை வைத்து எண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி தினமும் விளக்கேற்றும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -