ஆரோக்கியம் தரும் அகத்திக் கீரை சூப் டேஸ்டியாக அஞ்சு நிமிஷத்துல இப்படி கூட வெச்சி சாப்பிடலாமா? இது தெரியாம போச்சே!

- Advertisement -

அகத்திக்கீரையை பொதுவாக பசுக்களுக்கு உணவாக கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். இது பித்ரு தோஷம் நீங்க செய்யப்படும் பரிகாரமாக இருந்து வருகிறது ஆனால் அகத்திக்கீரையை நாம் உணவாக அடிக்கடி உட்கொண்டால் ஆரோக்கிய பாதிப்புகள் பல நீங்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய அகத்திக்கீரை நல்ல ஒரு பலன் கொடுக்கக் கூடியது. அகத்திக் கீரையில் இருக்கும் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவை நமக்கு நல்ல ஒரு வலிமையைக் கொடுக்கக்கூடியது எனவே அடிக்கடி இது போல அகத்திக்கீரை சூப் செஞ்சு கொடுத்து பாருங்கள், சுவையாகவும் இருக்கும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். அகத்திக்கீரை சூப் எப்படி செய்வது? என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அகத்திக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 6, பூண்டு பல் – 6, தக்காளி – 2, அகத்திக் கீரை – ஒரு கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், பாசிப்பருப்பு – ஒரு ஸ்பூன் , அரிசி கழுவிய தண்ணீர் – 2 டம்ளர், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

அகத்திக்கீரை சூப் செய்முறை விளக்கம்:
முதலில் அகத்திக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு கீரை இருந்தால் போதும். இப்போது ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். மிளகு, ஜீரகம் லேசாக பொரிந்து வரும் பொழுது ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துத் தாளியுங்கள். பின்னர் காரத்திற்கு ஏற்ப 2 பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும்.

6 பல் சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுமையாக அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு பூண்டையும் தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளி எடுத்து அதை சுத்தம் செய்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் நன்கு வதக்கி விடுங்கள். ஒரளவுக்கு வதங்கி வரும் பொழுது நீங்கள் ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துள்ள அகற்றி கீரைகளை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

கீரை நன்கு சுருள வதங்கி வரும் போது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் கிருமி நாசினி என்பதால் இது போல அகத்திக்கீரை சூப் செய்யும் பொழுது அதிகமாக சேர்த்தால் நமக்கு சளித்தொந்தரவு போன்றவையும் அகலும். சூப் நன்கு சுவையாக இருப்பதற்கு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாசிப்பருப்பை முதலில் ஊற வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஊற வைத்த இந்த பாசிப்பருப்பை இதனுடன் இப்போது சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சூப் செய்வதற்கு சாதாரண தண்ணீரை விட நல்ல சத்துள்ள அரிசி கழுவிய தண்ணீர் சேர்க்கலாம்.

அரிசியை முதல் முறை நன்கு கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். இரண்டாவது முறை கழுவிய தண்ணீரை இது போல சூப் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம், நல்ல சத்து கிடைக்கும். குக்கரில் இருந்து ஆவி வரத் துவங்கியதும் விசிலை எடுத்து மாட்டி விடுங்கள். 2 விசிலில் நன்கு அகத்திக் கீரை வெந்திருக்கும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு மற்ற பொருட்களை மட்டும் கொஞ்சம் ஆற விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துப் பின்னர் எடுத்து வைத்துள்ள தண்ணீருடன் கலந்து கொள்ள வேண்டும். இதன் மீது மிளகுத் தூள் தூவி சுடச்சுட பரிமாறி பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -