ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தப் பொருளை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு வாழ்நாளில் கஷ்டம் வர வாய்ப்பே இல்லை. எந்த கிரகங்களும் உங்களுக்கு கஷ்டத்தை தர முன்வராது.

navadhanyam1
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் வருவதற்கு முழு முதல் காரணமாக இருப்பது, நாம் செய்த கர்ம வினை. நாம் செய்த கர்ம வினையின் அடிப்படையில் தான் நம்முடைய ஜாதகங்கள் அமைந்திருக்கும். நம்முடைய ஜாதகங்களை அமைப்பதில் முன்னுரிமை பெறுவது நவகிரகங்கள். நவகிரகங்கள் இல்லாமல் நம்முடைய தலையெழுத்து கிடையாது. இந்த நவகிரகங்கள் நமக்கு நன்மையை செய்தாலே, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு இதனால் தான் பிரச்சனை வருகிறது என்றே புரியாது. கண்ணுக்கு தெரியாத பல வகையான பிரச்சனைகளுக்கும், கண்ணுக்குத் தெரியாத பல வகையான தோஷத்திற்கும் ஒரு சிறந்த பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

navagragham-1

இதற்கு நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். பூஜையும் செய்ய வேண்டாம். நிறைய காசும் செலவு செய்ய வேண்டாம். இந்த பொருளை ஞாயிற்றுக்கிழமை அன்று சமைத்து சாப்பிட்டாலே போதும். அது என்ன பொருள்? நீங்களும் தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

முதலில் நம்முடைய வீட்டில் செவ்வாய் கிழமை அன்றும் வெள்ளிக்கிழமை அன்றும் துவரம் பருப்பு சேர்த்த சமையலை கட்டாயம் செய்ய வேண்டும். இது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வெள்ளிக்கிழமைகளில் முடிந்தவரை துவரம் பருப்போடு சேர்ந்து வெள்ளை மொச்சையையும் சமையலில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வியாழக்கிழமை இரவே இந்த மொச்சையை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். அதில் ஒரு பாகத்தை எடுத்து உங்கள் வீட்டில் சமையலுக்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பாகத்தை ஒரு கைப்பிடி அளவாவது பசுமாட்டிற்கு கொஞ்சம் வெல்லம் கலந்து கொடுத்து விட வேண்டும்.

mochai

முடிந்தவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய் கிழமை அன்றும் வெள்ளி கிழமை அன்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து வாழைப்பழத்தை சேர்த்து பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுப்பது நம் கஷ்டத்தை படிப்படியாக குறைக்கும் என்றும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சரி, இப்போது ஞாயிற்றுக்கிழமைக்கு வருவோம். உணவில் சேர்க்க வேண்டிய அந்த ஒரு பொருள், பல மகத்துவங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அகத்திக்கீரை தான். அமாவாசை தினத்தில் மட்டும் தான் இந்த அகத்திக் கீரையை நாம் பசுமாட்டிற்கு வாங்கித் தருவோம். தவிர அதிகமாக சமையலில் நாம் இந்த அகத்திக்கீரையை சேர்த்துக் கொள்வது கிடையாது.

agathi-ilai

இதே அகத்திக்கீரையை ஞாயிற்றுக்கிழமைகளில் நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடியாவது சமையலில் சேர்த்து, சமைத்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். நவகிரகங்களினால் நமக்கு எந்த தோஷமும் உண்டாவதற்கு வாய்ப்பு கிடையாது. அப்படியே பிரச்சனைகள் வரும் பட்சத்தில், பிரச்சினைகளினால் நமக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க அந்த சூரிய பகவான் நம்மை காத்து நிற்பார் என்பதில் துளி அளவும் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

agathi-keerai-dhanam

இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். ஞாயிற்றுக்கிழமை அகத்திக்கீரையை சாப்பிட்டுவிட்டு அசைவம் சாப்பிடலாமா? பரிகாரத்திற்காக செய்யப்படக்கூடிய ஒரு வழிபாட்டு முறைதான் இதுவும். அசைவம் சாப்பிடாமல் தான் அகத்திக் கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் நினைவு கூறத்தான் வேண்டும்.

potato-urulai

ஞாயிற்றுக்கிழமை சமையலில் அகத்திக் கீரையை சேர்த்துக் கொண்டு பசுமாட்டிற்கு கொடுக்கும் பட்சத்தில், கிரக தோஷத்தால் நமக்கு பிரச்சனைகள் வராது. வியாழக்கிழமை அன்று அகத்திக் கீரையை பசுமாட்டிற்கு கொடுத்தும்  வந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும்‌. செவ்வாய்க்கிழமை அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு கொடுத்தால் கடன் சுமை தீரும். வெள்ளிக்கிழமை அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு கொடுத்தால் வருமானம் அதிகரிக்கும்.

kadan

எல்லா நாட்களிலும் அகத்திக் கீரையை சமையலில் சேர்த்து கொள்ள முடியாது. ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுமாவது சமையலில் இந்த கீரையை சேர்த்துக் கொண்டால் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்க நிறையவே வாய்ப்பு உள்ளது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் விநாயகருக்கு இதை செய்தால் நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயம் கூட உடனே நடக்கும் தெரியுமா? மனதில் உள்ள ஆசைகள் உடனே நிறைவேற பரிகாரம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -