வீட்டில் விநாயகருக்கு இதை செய்தால் நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயம் கூட உடனே நடக்கும் தெரியுமா? மனதில் உள்ள ஆசைகள் உடனே நிறைவேற பரிகாரம்!

vinayagar-manjal

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறுவதற்கு இறைவனிடம் பிரார்த்தனைகளும் இருக்கும். இது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம் தான். ஆனால் ஆசைகள் மட்டும் வெவ்வேறான ஆசைகளாக இருக்கும் அவ்வளவு தான். அந்த வேண்டுதல்கள் எல்லாம் பலிக்கிறதா? என்று கேட்டால்! பலரும் ‘நாம் ஒன்று நினைக்க, அது ஒன்று தான் நடக்கிறது’ என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி நீங்கள் நினைத்ததை நினைத்தபடி முடிக்க, உங்கள் ஆசைகள் நிறைவேற விநாயகரை எப்படி வழிபடலாம்? என்பதை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

vinayagar

முழுமுதற்கடவுளான விநாயகரே அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குகிறார். இந்த விநாயகரின் திருவுருவம் அரச மர இலையில் பதிந்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் ஆகும். அரச மரத்தில் விநாயகர் காட்சி தருகிறார் என்கிற நம்பிக்கை உள்ளது. அரச மரத்தில் இருக்கும் விநாயகரை வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த அரச மரத்தை கௌரவிக்கும் விதமாக இந்த மாலையைப் போட்டு வழிபட வேண்டும்.

இப்படி நாம் செய்வதால் அரச மரத்தில் இருக்கும் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். அரச மர விநாயகர், வெள்ளெருக்கு விநாயகர், மஞ்சள் பிள்ளையார் போன்ற ரூபங்களில் இருக்கும் விநாயகருக்கு தனி சக்தி உண்டு. இவர்களிடம் நாம் என்ன வேண்டினாலும் அதை அப்படியே நடக்கும். ஆனால் நம்முடைய வேண்டுதல்கள் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்திருங்கள்.

Vellerukka Vinayagar

தீராத கடன் தொல்லை ஒரு சிலருக்கு இருக்கும், திருமணத்தில் தடைகள் ஒரு சிலருக்கு இருக்கும், திருமணமாகி நிறைய வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத குழந்தை பாக்கியத்திற்கு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு ஆசை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ள வேண்டும் என்கிற ஏக்கத்துடன் காத்திருக்கும் இளம் வயதினரும் இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு ஆசை, நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிற போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம். அப்படியானவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலன் தரும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று செய்ய வேண்டும். புதன்கிழமை அன்று அரசமரத்திற்கு மஞ்சள் மாலை சாற்ற வேண்டும். மஞ்சள் கிழங்குகளை வெள்ளை நூலால் மாலையாக கட்டி வைக்க வேண்டும். மஞ்சளுக்கு எண்ணிக்கை எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களிடம் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு பெரிதாக மாலை கட்டிக் கொள்ளலாம். அந்த மஞ்சள் மாலையை புதன்கிழமை அன்று அரச மரத்திற்கு சாற்றி, அரச மரத்தை பிள்ளையாராக பாவித்து அவரை வணங்கி வழிபட வேண்டும்.

arasa-ilai

இப்படி வழிபடுவதால் அரசமரத்தில் பிள்ளையார் நேரடியாக அருள் புரிவதாக ஐதீகம் உள்ளது. பின்னர் அந்த மரத்திலிருந்து 9 இலைகளை பறித்துக் கொண்டு வீட்டிற்கு வர வேண்டும். வீட்டில் இருக்கும் உங்களுடைய பிள்ளையார் படத்தின் முன்பு இந்த ஒன்பது இலைகளை, நுனிப்பகுதி உங்களை நோக்கி இருக்குமாறு அழகாக அடுக்கி, அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி ஒவ்வொரு இலையிலும் வைக்க வேண்டும். இந்த அரச இலையில் தீபம் ஏற்றும் பொழுது மனதில் நினைத்த ஆசைகள் மற்றும் பிரார்த்தனைகள் அப்படியே உடனே நடக்கும் என்கிற நம்பிக்கை உண்டு.

இதையும் படிக்கலாமே
பெயர், புகழ், பதவி, பட்டம், இவையோடு சேர்ந்து பணமும் உங்களைத் தேடி வர, 3 முறை மோதிர விரலால் இதை எழுதினாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.