பூர்வ ஜென்ம பாவம் போக்கும் அகத்தியர் மூல மந்திரம்

agathiyar1

சித்தர்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் என்றால் அது அகத்தீச பெருமான் மட்டுமே. இவர் சித்தர்களுக்கெல்லாம் குருவாக அறியப்படுகிறார். தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான அகத்தியத்தை எழுதியவரும் இவரே. இவர் அறியதா சித்தர் கலை ஏதும் இல்லை. இவரை அறியாத சித்தர்களும் இல்லை. இப்படி பல சிறப்புகள் பெற்ற அகத்தியரின் மூல மந்திரம் அதை ஜெபிப்பதன் பயனாக நமது பூர்வ வினை பாவ தோடங்கள் அகலும். அதோடு மேலும் பல அறிய பலன்களையும் பெற இயலும்.

agathiyar

அகத்தியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம

அகத்தியரை வழிபட நினைப்பவர்கள் உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அசைவம், மது போன்றவற்றை உன்ன கூடாது. தினமும் காலையில் குளித்திவிட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால், அகத்தியர் நமக்கு சூட்சும வடிவில் வழிகாட்டுவார். அவரின் வழிகாட்டுதல் படி நாம் நடந்தால் நமது பாவங்கள் அகலும், நமது உள்ளத்தில் இனம் புரியாத இன்பம் பெருகும், ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பிறவி இல்லா பெருநிலையை அடைய வழி பிறக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் மற்றும் அதன் பலன்கள்

English overview:
This article has Agathiyar moola mantra in Tamil. Agathiyar moola manthiram is very very powerful mantra. If one chant this mantra regularly then Agathiyar will help him to come out from his sin.