கர்ப்பகால கால்குலேட்டர் | Pregnancy calculator in Tamil

Pregnancy calculator in Tamil
- Advertisement -

ஒரு பெண்ணின் வயிற்றில் கருமுட்டை வளரத் தொடங்குமேயானால் அதுவே கர்ப்ப காலம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே மாதவிடாய் தள்ளிப் போனால் அதைக் கொண்டு பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிகின்றனர். கர்ப்பமான பிறகு தங்கள் வயிற்றில் வளரும் கருவானது எத்தனை நாட்கள் வளர்ந்து உள்ளது, எப்போது குழந்தை பிறக்கும் போன்று தகவல்களை எளிதாக அறிந்து கொள்ளும் ஒரு கால்குலேட்டர் தான் பிரக்னன்சி கால்குலேட்டர் (Pregnancy calculator in Tamil). அதுபோன்ற ஒரு கால்குலேட்டர் தான் கீழே உள்ளது.

Pregnancy calculator in Tamil

Pregnancy calculator in Tamil

கடந்த மாதவிடாயின் முதல் நாளின் தேதி:

- Advertisement -

கர்ப்பகால கால்குலேட்டரை பயன்படுத்தும் முறை (Delivery date calculator in Tamil)

இந்தப் பிரக்னன்சி கால்குலேட்டரில் தங்களுக்கு கடைசியாக ஏற்பட்ட மாதவிடாயின் முதல் நாளை குறிப்பிட்டால் போதும். அதனைக் கொண்டு கரு உருவாகி எத்தனை வாரங்கள் ஆகி உள்ளது, பிரசவிக்கும் தேதி (Delivery date calculator in Tamil) போன்றவற்றை இது உங்களுக்கு சிறப்பாகவே வழங்கி விடும்.

ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை முதன் முதலில் அறியும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றால் அது மிகையாகாது. ஒரு பெண் தன் கணவரோடு சரியான நேரத்தில் கூடி இருந்தால் மாதவிடாய் ஏற்பட்டு 14 முதல் 17 நாட்களில் கருவானது வளரத் தொடங்கும். அதன் வெளிப்பாடாக பெண்களின் உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக உடல் சோர்வுறுவது, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது, குமட்டல், வாந்தி இப்படி பல மாற்றங்களை கூறலாம்.

- Advertisement -

கருவுற்றதற்கான அறிகுறிகள் – Pregnancy symptoms in Tamil

மாதவிடாய் தள்ளிப் போய் மருத்துவரிடம் தாங்கள் கருத்தரித்து இருக்கிறோமா என்று பரிசோதிப்பதற்கு முன்பாகவே பெண்களால் தாங்கள் கருவுற்று இருப்பதை உணர முடியும். உதாரணமாக பெண்கள் கருவுற்ற பிறகு அவர்களின் வாசனைத் திறன் என்பது சற்று அதிகமாகவே இருக்கும். உதாரணமாக அவர்கள் எப்போதும் சமைக்கும் உணவையே சமைத்து இருந்தாலும் அதில் ஏதோ ஒரு கூடுதல் வாசனை அவர்களுக்கு தெரியும்.

அதே போல அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகள் கூட அவர்களுக்கு ஒரு விதமான குமட்டலை உண்டாக்க கூடும். காலையில் அதிகப்படியான சோர்வு, உடலில் கூடுதல் வெப்பம் இப்படி பல அறிகுறிகளை அவர்களின் உடல் அவர்களுக்கு உணர்த்தும்.

- Advertisement -

pregnancy

எல்லா பெண்களுக்கும் ஒரே விதமான கர்ப்ப கால அறிகுறிகள் இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. அவர்களின் உடல் மற்றும் மனநிலை பொறுத்து பெண்ணுக்குப் பெண் அறிகுறிகள் மாறுபடும். சிலருக்கு அதிகப்படியான வாந்தி இருப்பது சிலருக்கு மிகக் குறைந்த அளவிலான வாந்தி இருப்பதை நாமே பார்த்தோ அல்லது கேள்விப்பட்டோ இருப்போம்.

அதேபோல கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றம் என்பது நிகழும். அதன் காரணமாக பலவித உணவுகளை அதிக அளவில் உண்ணக்கூடிய தூண்டுதல் இருக்கும். ஆனால் அதே சமயம் செரிமான கோளாறும் ஏற்படும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Pregnancy symptoms

குழந்தை அசைவு எப்படி இருக்கும்

ஃபர்ஸ்ட் ட்ரை செமஸ்டர் என்று சொல்லக்கூடிய கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் (pregnancy week calculator in Tamil) பெண்களால் குழந்தையின் அசைவுகளை உணர முடியாது. ஆனால் அதே சமயம் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள்ளாக குழந்தையின் அசைவை உணர முடியும். அந்த அசைவானது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி பறந்தால் எப்படி இருக்குமோ அது போல் இருக்கும்.

குழந்தையின் அசைவை ஆரம்ப காலத்தில் தாய் மட்டுமே உணரக்கூடும் என்றாலும் நாட்கள் செல்ல செல்ல குழந்தையின் அசைவை தந்தையால் கூட காண முடியும். மூன்றாவது ட்ரை செமஸ்டர் என்று சொல்லக்கூடிய கடைசி மூன்று மாதங்களில் குழந்தை முழுமையாக வளர்ந்து பிரசவத்திற்கு தயாராக இருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தையின் அசைவுகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pregnancy calculator in Tamil

குறிப்பு:
இந்த கால்குலேட்டடர் (pregnancy due date calculator in Tamil) கொண்டு நாம் கணிப்பது உத்தேசமான பிரசவ தேதியே. சரியாக இந்த நாளில் தான் குழந்தை பிறக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. பிரசவ வலி என்பது 9 மாதங்கள் ஆன நிலையில் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதே போல கருவுற்ற தேதியையும் உத்தேசமாக கணித்து அதை கொண்டே கரு உறவாகி எத்தனை வாரங்கள் ஆகி உள்ளது என்பதையும் கணித்துள்ளோம்.

English Overview:
Here we have pregnancy due date calculator in Tamil. We can also call it as Delivery date calculator in Tamil or pregnancy week calculator in Tamil.

- Advertisement -