தேவையற்ற முடிகளை முகத்திலிருந்து தானாவே உதிர செய்ய, இந்த 1 பொடி போதும். உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரவே வளராது.

face15
- Advertisement -

உங்களுடைய முகத்தில் தேவையற்ற முடிகளை நீங்கள் எப்படி அகற்றினாலும் சரி, அகற்றவில்லை என்றாலும் சரி, தேவையற்ற முடி இருக்கும் இடத்தில் இந்த பேக்கை போட்டுக் கொள்ளுங்கள். அதாவது தேவையற்ற முடிகளை முகத்தில் இருந்து நீக்குவதற்கு சிலர் ரேஸர் பயன்படுத்துவார்கள். சிலர் வேக்ஸ் செய்து தேவையற்ற முடிகளை நீக்கி கொள்வார்கள். சிலபேர் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்கவே மாட்டார்கள். எப்படி இருந்தாலும் சரி இந்த பேக்கை முகத்தில் போட்டு வர 3 மாதத்தில் உங்களுடைய முகத்தில் இருக்கும் முடிகள் அனைத்தும் தானாகவே உதிரத் தொடங்கிவிடும்.

அதாவது இந்த பேக்கை போடத் தொடங்கிய ஒரு மாதத்தில் திக்காக வளர கூடிய உங்களுடைய முடி கொஞ்சம் மெல்லிசாக வளரத் தொடங்கும். ஒரு சில நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக முடி வளர்ச்சி குறைந்து முடி உதிர தொடங்கும்.

- Advertisement -

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருட்கள் குப்பைமேனி இலை பொடி, அதிமதுரப் பொடி, மஞ்சள் பொடி, கடலை மாவு. எல்லா பொடியையும் முதலில் தனித்தனியாக வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு அகலமான பவுலில் 4 டேபிள்ஸ்பூன் அதிமதுரப் பொடி, 2 டேபிள்ஸ்பூன் குப்பைமேனி போடி, 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் அளவு மஞ்சள்தூள். இந்த அளவுகளில் பொடியை கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இதை எடுத்து நாம் பேக் போட்டுக் கொள்ளலாம்.

குறிப்பாக இந்த பேக்கை நாம் சோம்பு தண்ணீரில் கலக்க வேண்டும். 1 ஸ்பூன் சோம்பை, 1 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து சோம்பின் எசன்ஸ் அந்த தண்ணீரில் இறங்கியதும் தண்ணீரை வடிகட்டி அந்த சொம்பு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு சிறிய கிண்ணத்தில் நாம் நான்கு பொடியையும் சேர்த்து ஒன்றாக கலந்து வைத்திருக்கின்றோம் அல்லவா அந்த பொடியிலிருந்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை கலக்க தயார் செய்து வைத்திருக்கும் சோம்பு தண்ணீரை பயன்படுத்துங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சோம்பு தண்ணீரை ஊற்றி இந்த கொடியைப் பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பேக்கை முகம் முழுவதும் ஃபேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். ஃபேஸ் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழிந்த பின்பு அது ட்ரையாகி இருக்குமல்லவா. தண்ணீரை போட்டு முகத்தை நனைத்துக் கொண்டு, லேசாக மசாஜ் செய்து கழுவி விடுங்கள். அவ்வளவு தான். தினம்தோறும் இந்த பேக்கை போட்டு வரலாம்‌. எந்த ஒரு பக்க விளைவுகளும் உங்களுக்கு ஏற்படாது.

ஒருவேளை உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் ஆக இருந்தால், இந்த பேக்கை பேட்ச் டெஸ்ட் போட்டு பரிசோதனை செய்துவிட்டு அதன் பின்பு முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இந்த பேக்கை பயன்படுத்தி உங்களுடைய முடி ஒருமுறை உதிரத் தொடங்கி விட்டால், அந்த இடத்தில் நிச்சயமாக மீண்டும் முடி வளர்ச்சி இருக்காது. முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய அழகு இன்னும் அழகாக மாற இந்த குறிப்பு உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

- Advertisement -