இன்று 28.10.2024 வந்திருக்கும் திங்கட்கிழமை அன்று என்னென்ன விசேஷங்கள் இருக்கிறது என்பதை முதலில் பார்த்து விடுவோம். இன்றைய தினம் ஐப்பசி மாத ஏகாதசி திதி, இதை இந்திர ஏகாதேசி என்று சொல்கிறார்கள். அடுத்தபடியாக இன்று வாஸ்து நாள். வாஸ்து பகவான் கண் விழித்திருக்கக்கூடிய நேரத்தில், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர, வாஸ்து பகவானை வழிபாடு செய்தால் சிறப்பு. அடுத்தபடியாக இன்று ஐப்பசி பூரம்.
ஆடிப்பூரம் அம்பாளுக்கு எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதேபோல இந்த ஐப்பசி பூரமும் அந்த அன்னைக்கு மிக மிக அற்புதமான நாளாக சொல்லப்பட்டுள்ளது. இன்று நிறைய பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இன்று விசேஷம், சங்கரன்கோவில் கோமதி அம்மனுக்கும் எம்பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
இதுபோல பல சிறப்பு வாய்ந்த கோவில்களில் அம்பாளுக்கு சிறப்பு வாய்ந்த பூஜைகள் இன்று நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இந்த நாளில் நாம் அம்பாளின் அருள் ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், நம்முடைய கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், நம்முடைய வீட்டில் எப்படி எளிமையாக வழிபாடு மேற்கொள்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வழக்கம்போல பூஜைக்கு உங்கள் வீட்டு பூஜை அறையை தயார் செய்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு இனிப்பு நெய்வேதியம் செய்து அம்பாளுக்கு படைக்க வேண்டும். குறிப்பாக பச்சரிசி மாவில் செய்த புட்டு அம்பாளுக்கு இன்று உகந்த நெய்வேத்தியமாக சொல்லப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் ஒரு சிவப்பு நிற வளையல் செட் அல்லது பச்சை நிற கண்ணாடி வளையல் செட் வாங்கி அம்பாளுக்கு வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். ரொம்ப ரொம்ப நல்லது.
பிறகு வழக்கம் போல விளக்கு ஏற்றி தூபம் போட்டு அம்பாளின் முன்பு உங்களுடைய கஷ்டங்களை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும், இந்த அம்பாளிடம் முறையிடலாம். அம்பாள் உங்களுடைய கோரிக்கைகளை ஏற்று உடனடியாக அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்து விடுவாள். அம்பாளின் முன்பு அமர்ந்து நீங்கள் இன்று படிக்க வேண்டிய அபிராமி அந்தாதி பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.
அபிராமி அந்தாதி
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை
வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
இந்தப் பாடல் வரிகளை குறைந்தது மூன்று முறை படித்தால் கூட போதும். தாயே நீயே துணை என்று அவளின் பாதத்தில் சரண் அடைந்து இன்று இந்த பாடலை படியுங்கள். இந்த பாடல் வரிகள் நீங்கள் கைநீட்டி வாங்கிய பணம் சம்பந்தப்பட்ட கடனையும் தீர்க்கும். உங்களுடைய கர்ம வினை கடனையும் தீர்க்கும். உங்கள் துன்பங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்தது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வழிபாடு
உங்களுடைய மன கஷ்டம் தொடங்கி பணக்கஷ்டம் வரை ஆரோக்கிய பிரச்சனையிலிருந்து அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய எளிமையான வழிபாடு இது. அம்பாள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இது. யாரும் தவற விடாதீர்கள். இன்று மாலை ஆறு மணி போல ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அன்னை பாதத்தை சரணடைபவர்கள் வாழ்க்கையில் துன்பமே இல்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.